ஆப்பிள் நிறுவனமானது ஐபோனிற்கான அப்டேட்களை வழங்கிகொண்டே இருக்கும். அதிலும் ஐ.ஓ.எஸ் 15.3 மற்றும் ஐ.ஓ.எஸ் 15.4-ற்கான வெர்ஷன்கள் தொடர்பான அப்டேட்டுகள், அதைப்பற்றிய தகவல்கள் அடிக்கடி வெளிவந்துகொண்டே இருக்கின்றன.
அதன்படி, தற்போது ஐபோனில் "Face id with a mask" எனும் மாஸ்குடனே ஃபேஸ் அன்லாக் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் மாஸ்குடன் வெளியேறு செல்லும் நபர்களுக்காகவே இந்த வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இதற்கான அப்டேட் வெளியாகவிருக்கும் ஐஓஎஸ் 15.4 வெர்ஷனில் வரவிருக்கிறது. இந்த அப்டேட்டின் வழியாக, ஐபோன் யூசர்கள் தங்கள் ஐபோன்களில் உள்ள ஃபேஸ் ஐடியை மாஸ்க்குகளை அணிந்து கொண்டே பயன்படுத்தி போனை அன்லாக் செய்து கொள்ளலாம்.
அதுமட்டுமின்றி, இந்த அம்சம் கண் கண்ணாடிகள் மற்றும் பல சன்கிளாஸ்களுடனும் வேலை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது.