முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான சரயு ராய் இந்து கடவுள்களை அசிங்கப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருந்து வருகிறார், மேலும் சொந்தமாக youtube சேனலும் நடத்தி வருகிறார். பிக் பாஸ் தெலுங்கு 5ம் சீசனில் பங்கேற்ற அவர் முதல் ஆளாக எலிமினேட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அவர் சர்சையில் சிக்க காரணம் அவரது விளம்பர வீடியோ ஒன்று தான். அந்த வீடியோவில் போதையில் இருக்கும் சிலர் விநாயகரை புகழ்ந்து கோஷம் எழுப்புவது போல காட்டப்பட்டு இருக்கிறது.
அது ஹிந்துக்கள் மனதை புண்படுத்துவது போல இருக்கிறது என சொல்லி நடிகை சரயு ராய் மீது போலீசில் புகார் அளித்தனர். இது பற்றிய விசாரணைக்காக ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் அவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்திருக்கிறார்.
அந்த வீடியோ வைரல் ஆகி அவர் கைதாகிவிட்டதாக செய்தி பரவி வருகிறது.