More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • பக்கத்து மாநிலத்தில் நடப்பது ஒற்றைச் சுவர் தாண்டி தமிழகத்திற்கும் வந்துவிடக் கூடாது; கமல்ஹாசன்
பக்கத்து மாநிலத்தில் நடப்பது ஒற்றைச் சுவர் தாண்டி தமிழகத்திற்கும் வந்துவிடக் கூடாது; கமல்ஹாசன்
Feb 09
பக்கத்து மாநிலத்தில் நடப்பது ஒற்றைச் சுவர் தாண்டி தமிழகத்திற்கும் வந்துவிடக் கூடாது; கமல்ஹாசன்

இந்தியாவின்   கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்திவரும் நிலையில், பக்கத்து மாநிலத்தில் நடப்பது ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் தமிழகத்திற்கும் வந்துவிடக் கூடாது மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் எச்சரித்துள்ளார்.



கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது.



இதனால், இஸ்லாமிய மாணவிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில மாணவர்கள் காவித் துண்டு அணிந்து கல்லூரிகளுக்கு வருகின்றனர்.



இதனையடுத்து , கர்நாடகாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனைத்து மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.



ஹிஜாப் அணிவதற்கு அனுமதி கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக இன்று விசாரணை நடைபெறவுள்ளது. இந்நிலையில், குறித்த விவகாரம் தொடர்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது டிவிட்டரில்,



பக்கத்து மாநிலத்தில் நடப்பது ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் தமிழகத்திற்கும் வந்துவிடக் கூடாது என எச்சரித்துள்ளார். கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது. கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது.



ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழகத்திற்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது” என அவர் பதிவிட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb24

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் இன

Jul05

உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் முஸ்லிம் ராஷ்ட்ர

Mar23

பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கா

Mar29

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தே

Jul11

இமாச்சல பிரதேசத்தில் சுற்றுலா தலங்களில் மாஸ்க் அணியா

Jun12
Jun02

முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் மக்களின் இயல்பு ந

May25

கொரோனா 3-வது அலை, குழந்தைகளை அதிகம் தாக்குமா என்பது குற

Mar03

இந்தியாவில் பங்கு சந்தை வீழ்ச்சியால் கணவர், மனைவி தூக

Apr08

திருப்பதியில் மொட்டை அடித்து பக்தர்கள் அளித்த காணிக

Aug25

நாட்டின் ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை காசாக்க

Feb19

திமுக  இளைஞரணி அமைப்பாளர் செல்லதுரை படுகொலைக்கு

Jun20

டெல்லியில் உள்ள சந்தைகள், மக்கள் அதிகமாக கூடும் இடங்க

Mar11

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ர

Aug31

ஆகாஷ் எஸ் ஏவுகணை மற்றும் துருவ் மார்க் - 3 என்ற அதிநவீன இ