More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை
நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை
Feb 09
நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை

நாட்டின் தற்போதைய நெருக்கடிகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் தெரிவித்த கருத்துக்கள் மற்றும் ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ  தெரிவித்த பதில் ஆகியவை தொடர்பில் நேற்று சபையில் சர்ச்சை ஏற்பட்டதுடன் அது சில நிமிடங்கள் நீடித்தது.



எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்த கருத்துக்களை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ''கிசு கிசு''க்கள் என வர்ணித்ததால் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்குமிடையில் சபையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது.



பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச 27இன்கீழ் 2இல் மக்களின் வாழ்வாதார நெருக்கடிகள் , நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நிதி அமைச்சரிடம் பல கேள்விகளை எழுப்பினார்.



அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, விரைவில் அதற்கான பதிலை பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.



அக்கேள்விகளுக்கு பதிலளிக்க சபையில் நிதி அமைச்சரோ ,நிதி இராஜாங்க அமைச்சரோ இல்லாதால் ஆளும் கட்சியின் பிரதம கொரடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பதில் அளித்தார். அதன்போது 27 கீழ் 2 கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்கும் எனினும்,எதிர்க்கட்சித்தலைவரின் ''கிசு கிசு''க்களுக்கு பதில் வழங்க முடியாது என்றார்.



அதனையடுத்து எழுந்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச ,



மக்களின் வாழ்வாதார நெருக்கடிகள், நாட்டின் நிதிப்பற்றாக்குறை பிரச்சினைகள் அரசுக்கு ''கிசு கிசு''க்களாகிவிட்டனவா? அரசு மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை ''கிசு கிசு''க்களாகத்தான் பார்க்கின்றதா எனக்கேள்வி எழுப்பினார்.



அதற்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பதிலளிக்கையில், எழுத்து மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கப்படும். ஏனையவை ''கிசுகிசு''க்களாக இருப்பதால் பதில் வழங்க முடியாது என்றே நான் கூறினேன் என்று குறிப்பிட்டார்.



நான் முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை நிதியமைச்சரிடம் எழுப்பியுள்ளேன் . ஆனால் இக்கேள்விகளுக்கு பதிலளிக்க சபையில் நிதியமைச்சரோ, நிதி இராஜாங்க அமைச்சரோ இல்லை. நாட்டின் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க அமைச்சர்கள் பொறுப்புடன் சபையில் இருக்க வேண்டுமென எதிர்க்கட்சித்தலைவர் தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar07

கிளிநொச்சி

கிளிநொச்சி இரணைமடு அம்பாள்நகர் பகுத

Jan24

வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற விபத்த

May15

இந்த மாதத்தில் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணி

May22

அரசியலமைப்பின் 21வது சீர்திருத்தம் நாளை (23) அமைச்சரவையி

Oct24

எதிர்காலத்தில் பகிடிவதைக்கு எதிராக கடுமையான தீர்மான

Sep20

இலங்கை அரசாங்கம் 13 வருடங்களாக சாதிக்காததை நிரந்தர மக்

Sep17

வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு ப

Apr28

இலங்கையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.02 லட்சம் எ

May01

அரசாங்கத்திற்கு எதிராக அலரி மாளிகைக்கு முன்பாக நடத்த

Apr06

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள வெவ்வேறு பி

Aug16

கொவிட் பரவல் தற்போது கட்டுப்படுத்தப்படாவிட்டால் நாட

Jun08

மட்டக்ககளப்பில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை வ

Jan27

இலங்கை பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான உடற்த

Jul01

அரசியல் கைதிகளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என்று அ

Mar13

முன்னொருபோதுமில்லாத அளவுக்கு நாடு பெரும் பொருளாதார ந