அமைச்சர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் செலவுகளை மேலும் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அது தொடர்பில் விசேட வழிகாட்டல்களை நிதியமைச்சு அனைத்து அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ளது.
அதற்கிணங்க வரவு செலவுத் திட்டம் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு உட்பட்ட செயற்திட்டங்கள் தவிர்ந்த வேறு எந்த செயற்திட்டங்களுக்கும் நிதி கோருவதை தவிர்த்து கொள்ளுமாறும் நிதியமைச்சு அனைத்து அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச நிறுவனங்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.