More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • புதுச்சேரி பா.ஜ.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு ஏற்பு!
புதுச்சேரி பா.ஜ.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு ஏற்பு!
Sep 24
புதுச்சேரி பா.ஜ.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு ஏற்பு!

நாடாளுமன்ற மேலவை எம்.பி. தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு ஏற்கப்பட்டது. போட்டியின்றி அவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.



ஆளுங்கூட்டணியில் போட்டி



நாடாளுமன்ற மேலவைக்கு புதுவையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட கோகுலகிருஷ்ணன் எம்.பி.யின் பதவிக்காலம் அக்டோபர் 6-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் புதிய எம்.பி.யை தேர்வு செய்ய அக்டோபர் 4-ந்தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி கடந்த 15-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. புதுவையில் உள்ள ஒரே ஒரு மேலவை எம்.பி. பதவியை பெற ஆளும் கூட்டணி கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. இடையே கடும் போட்டி இருந்து வந்தது. ஆளுங்கட்சிகளுக்குள் மோதல் ஏற்பட்டு தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தினால் தி.மு.க.வும் களத்தில் குதிக்க திட்டமிட்டது.



இந்தநிலையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டு புதுவை மேலவை எம்.பி. தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான தீர்மானத்துடன் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பா.ஜ.க. வேட்பாளரை ஆதரிக்குமாறு அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினார்கள்.



ரங்கசாமி சம்மதம்



அதைத்தொடர்ந்து நடந்த என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எம்.பி. பதவியை பா.ஜ.க.வுக்கு விட்டுத் தரக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. இறுதியில் பா.ஜ.க. மேலிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியதில் எம்.பி. பதவியை விட்டுக் கொடுக்க ரங்கசாமி ஒப்புக்கொண்டார். இதையடுத்து கடைசி நாளான நேற்று முன்தினம் பா.ஜ.க. வேட்பாளராக செல்வகணபதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இவரை தவிர எம்.பி. பதவியில் போட்டியிட விரும்பி புதுவை மக்கள் கட்சி சார்பில் அரிகரன் மற்றும் சுயேச்சையாக தேர்தல் மன்னன் பத்மராஜன் உள்பட 6 பேர் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது. இதில் பா.ஜ.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. எம்.எல்.ஏ.க்கள் யாரும் முன்மொழியாததால் மற்றவர்களின் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்புமனுக்களை வாபஸ் பெற வருகிற 27-ந்தேதி கடைசி நாள் ஆகும்.



அதிகாரப்பூர்வ அறிவிப்பு



தற்போதைய நிலையில் எம்.பி. பதவிக்கான போட்டியில் பா.ஜ.க. வேட்பாளர் செல்வகணபதி மட்டுமே உள்ளார். எனவே அவர் போட்டியின்றி வெற்றிபெறுவது உறுதியாகிவிட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற 27-ந்தேதி வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul01

மைசூரு மிருகக்காட்சி சாலை ஊழியர்களுக்கு உணவு பொருட்க

Oct31

முன்னாள் துணை பிரதமரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான

Mar02

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், திமுக தலைவர

Oct14

இருள் சூழ்ந்த அடிவானத்தில் நம்பிக்கை ஒளியாக இந்தியாவ

Nov21

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிர

Feb01

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிகள் உள

Mar04

குஜராத் மாநிலம் வதோதரா நகரில் மத்திய சிறைச்சாலை உள்ளத

Jul17

சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்

Mar05

வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா (வயது 74). 3 ம

Mar29

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் 6 புரிந்துணர்வு ஒப

Feb27

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சமீபத்தில் நிகழ

Aug13

சட்டப்பேரவையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகரா

Apr03

ராஜஸ்தான் மாநில புத்தாண்டின் முதல் நாளான நேற்று நவ சம

May29

லட்சத்தீவு மக்களின் வாழ்க்கை,

Mar08

கள்ளக்குறிச்சி அருகே சினிமா பட பாண