மதுரைக்கு காரில் மூட்டை மூட்டையாக கலர் ஜெராக்ஸ் எடுத்த ரூபாய் நோட்டுக்களை கடத்திவந்த 10 பேரை போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி சோதனைச்சாவடியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த வழியாக சந்தேகத்திற்குரிய வகையில் வந்த 2 கார்களை மறித்து சோதனை நடத்தினர். அப்போது, கார்களில் ரூ.2000, ரூ.500 மற்றும் ரூ.100 நோட்டுகள் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டு 3 பைகளில் கட்டுக்கட்டாக கொண்டு சென்றது தெரியவந்தது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், 2 கார்களில் வந்த கோவையை சேர்ந்த அக்பர், ஈரோடு சரவணன், மதுரையை சேர்ந்த அன்பு, கேரளாவை சேர்ந்த டோமி தாஸ், மதுரை திருமங்கலத்தை சேர்ந்த தண்டீஸ்வரன் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து காவலர் உடை, போலி ரூபாய் நோட்டுகள் மற்றும் 2 கார்களை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.