More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது!
தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது!
Sep 19
தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது!

தமிழகத்தில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இந்தநிலையில்,  தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.



அந்த வகையில் கடந்த 12ந்தேதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அன்று ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், 20 லட்சத்துக்கும் அதிகமானோர் அன்று தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். அதன்படி, 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.



இந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்த தடுப்பூசி முகாமில் 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



 



சென்னையில் இன்று 1,600 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.  இன்று நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



 



கடந்த 17ந்தேதி மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற இருந்த நிலையில், மத்திய அரசிடம் இருந்து போதிய தடுப்பூசிகள் கிடைக்கப்பெறாத சூழலில் இன்றைக்கு முகாம் நடைபெறுகிறது என தமிழக அரசு முன்பே அறிவித்து இருந்தது.



கடந்த முறை 28 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருந்த நிலையில், கூடுதல் தடுப்பூசிகளை செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.



 



காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளலாம்.  கடந்த முறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்கள் அனைவரும் இந்த மெகா தடுப்பூசி முகாமை பயன்படுத்தி கொள்ளும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr13

திருப்பதி பாராளுமன்ற தொகுதியில் வரும் 17-ம் தேதி இடைத்த

Jun06

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அ

Sep06

நடந்து முடிந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பண பட்டுவா

Jun16

கொரோனா தொற்றினால் பெற்றோர் 2 பேரையோ அல்லது அவர்களில் ஒ

Aug06

பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் கடந்த ச

Feb08

உத்தரகாண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் பனிப்பாறை உட

Jun10
Jul03

திருப்பதி அருகே உள்ள புங்கனூர் அலிபிரி சாலையை சேர்ந்த

May19

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்க

Jul07

100 நாள் வேலைத்திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊ

May29

லட்சத்தீவு மக்களின் வாழ்க்கை,

Jan03

ராஜஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்தம் எண்

Sep29

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் உயர்மட்டக் கூட்டத்தி

Jan23

மத்திய அரசின் 3 வேளாண் சட்டத் திருத்த மசோதா

Sep26

தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் மாநகராட்சி