More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • காபூலில் வான் தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் பலி- மன்னிப்பு கேட்ட அமெரிக்கா!
காபூலில் வான் தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் பலி- மன்னிப்பு கேட்ட அமெரிக்கா!
Sep 18
காபூலில் வான் தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் பலி- மன்னிப்பு கேட்ட அமெரிக்கா!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து அங்கு தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர்.

 



அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேற கடந்த மாதம் 31-ந்தேதி வரை கெடு விதிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்பாக ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கர்கள் உள்பட வெளிநாட்டினர் மற்றும் நாட்டில் இருந்து வெளியேற விரும்பும் ஆப்கான் மக்களுக்கு அமெரிக்க படைகள் உதவின.



காபூல் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அமெரிக்க படைகள் அங்கிருந்து விமானங்கள் மூலம் மக்களை அனுப்பினர். இதையடுத்து காபூல் விமான நிலையம் முன்பு ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்தனர்.



இதற்கிடையே கடந்த 26-ந்தேதி காபூல் விமான நிலையத்தை குறிவைத்து தற்கொலை படை தாக்குதலை ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்தினார்கள். இதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 13 பேர் உள்பட 182 பேர் பலியானார்கள்.



இதற்கு பதிலடியாக கடந்த 29-ந்தேதி அமெரிக்கா சிறிய ரக ஆளில்லா விமானம் (டிரோன்) மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் விமான நிலைய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகள் உள்பட 10 பேர் உயிரிழந்ததாக அமெரிக்கா அறிவித்தது. ஆனால் இதில் பலியானவர்கள் 10 பேரும் பொதுமக்கள் என்றும் அதில் 7 குழந்தைகளும் அடங்குவர் என்றும் தகவல் வெளியானது.



இந்த நிலையில் டிரோன் தாக்குதலில் பலியான 10 பேரும் பொதுமக்கள்தான் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகள் என்று நினைத்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு விட்டதாகவும் இது ஒரு சோகமான தவறு என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.



இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாய்ட் அகஸ்டின் கூறியதாவது:-



பொதுமக்கள் மீதான இந்த தவறான தாக்குதலுக்கு வருந்துகிறோம். இதற்கான மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நான் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த கொடூரமான பிழையில் இருந்து நாங்கள் கற்றுக்கொள்ள முயற்சிப்போம்.



இவ்வாறு அவர் கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr12

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் மற்றும் ஐர

Mar08

உக்ரைன் - ரஷ்யா இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், தல

Jun11

உக்ரைன் மீதான ரஷ்ய போர் 106 நாட்களை கடந்துள்ளது. எனினும்,

Mar05

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 9ஆவது ந

Jul25

சீனாவில் பெய்து வரும் தொடர் மழையால் பல லட்சம் மக்கள் ப

Nov05

ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள கார்னர்வோன் நக

Feb04

கடுமையான உள்ளிருப்பு கட்டுப்பாடுகளுக்கு பெரும்பான்ம

May04

பிரித்தானிய விமான நிலையங்களில் இருந்து பறக்கும் பிரி

Jun22

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடும் ஆதிக்கம் ச

May11

ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் ஷியா பிரிவு முஸ்லிம

Mar04

உக்ரைனில் ரஷ்ய துருப்புகளின் கை ஓங்கியுள்ளதாக தகவல் வ

Feb13

லொறி சாரதிகளின் ஆர்ப்பாட்டங்களை இரும்புக்கரம் கொண்ட

Mar07

ரஷ்யாவில் அனைத்து திட்டங்களும் நிறுத்தப்படுவதாக உலக

Feb13

ரஷ்யா விரைவில் அதன் அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமிக்கும

Mar09

பிரபல ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டிகாப்ரியோ உக்ரைனுக்