More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது!
என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது!
Sep 15
என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது!

தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்காக தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் 13 பேர் 200-க்கு 200 மார்க் பெற்று இருந்தனர்.தமிழகத்தில் மொத்தம் 440 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்கள் உள்ளன. இதில் சேருவதற்காக விண்ணப்பித்தவர்களில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 33 பேர் தகுதி உடையவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.



இவர்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கியது. ஆன்லைன் மூலமாக கலந்தாய்வு நடத்தி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.



இதற்காக தமிழ்நாடு முழுவதும் 43 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அங்கிருந்தபடி ஆன்லைன் மூலமாக மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளை தேர்வு செய்தனர்.



இத்துடன் கம்ப்யூட்டர் மையங்கள் மூலமும், வீட்டில் இருந்தபடியும் சில மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர். இன்றைய கலந்தாய்வு சிறப்பு பிரிவினருக்காக நடத்தப்பட்டது.



அரசு பள்ளிகளில் இட ஒதுக்கீடு மாணவ-மாணவிகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகியோர் இந்த சிறப்பு குழுவில் இடம் பெற்று இருந்தனர்.



அவர்கள் கலந்தாய்வில் பங்கேற்று தர வரிசைப்பட்டியலின் அடிப்படையில் விரும்பிய கல்லூரிகளை தேர்வு செய்தனர். சிறப்பு பிரிவு கலந்தாய்வு வருகிற 24-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெறும்.



அதன் பிறகு வருகிற 27-ந் தேதி பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். அடுத்த மாதம் 17-ந் தேதி வரை பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடர்ந்து நடைபெறும்.



அனைத்து இடங்களையும் நிரப்பும் வகையில் இந்த முறை 5 கட்டங்களாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது. உரிய இடங்கள் நிரம்பும் வரை கலந்தாய்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 



முதல்கட்ட கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்ட அரசு கல்லூரி இட ஒதுக்கீடு மாணவர்களுக்கு சேர்க்கை ஆணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 18-ந் தேதி வழங்க உள்ளார்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb17

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்த தேவாரம் டி.மீனாட்சி

Sep05

முன்னாள் ஜனாதிபதி டாக்டர். ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் (

Aug30

தமிழகத்தில் 

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயி

May04

அமராவதி: ஆந்திராவில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி

Oct03

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றும

Aug14

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வ

Mar27

துபாய் எக்ஸ்போவில் பங்கேற்க அரசு முறை பயணமாக சென்னையி

Feb11

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமு

May16

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்

Apr15

அரசியல், மத கூட்டங்களை நிறுத்தவில்லை என்றால் கொரோனா வ

Jun22

அகில உலகத்துக்கு இந்தியா வழங்கிய பெருங்கொடைகளில் முக

Aug08

குமரி மாவட்டம் அழகப்பபுரத்தில் உள்ள ஒரு கடையில் ஆமை ஓ

Jul09

சர்வதேச அளவிலான சாலை விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்

Feb28

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ 'அமேசோனியா - 1'