More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • 3-வது திருமணத்துக்கு தயாரான பிரிட்னி ஸ்பியர்ஸ்!
3-வது திருமணத்துக்கு தயாரான பிரிட்னி ஸ்பியர்ஸ்!
Sep 14
3-வது திருமணத்துக்கு தயாரான பிரிட்னி ஸ்பியர்ஸ்!

அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் (வயது 39). இவர் கடந்த 2004-ம் ஆண்டு ஜனவரி மாதம் தனது நீண்ட கால நண்பரான ஜேசன் ஆலன் அலெக்சாண்டரை திருமணம் செய்தார். எனினும், இந்த திருமணம் செல்லாது என அடுத்த 55 மணி நேரத்தில் கோர்ட்டு அறிவித்தது. தனது செயல் குறித்த புரிதல் பிரிட்னி ஸ்பியர்சுக்கு இல்லை என கோர்ட்டு தெரிவித்தது.



எனினும் அடுத்த சில மாதங்களிலேயே கெவின் பெடர்லைன் என்பவரை அவர் மணந்தார். ஆனால் இந்த திருமண வாழ்க்கையும் நீண்ட காலம் நீடிக்கவில்லை. 2007-ம் ஆண்டு இருவரும் விவகாரத்து பெற்று பிரிந்தனர்.



இதைத்தொடர்ந்து 2008-ம் ஆண்டு முதல் பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது தந்தை ஜேமி ஸ்பியர்ஸ் கட்டுப்பாட்டில் இருந்து வந்தார். இதனால் தனது பொருளாதாரம் சார்ந்த, வாழ்க்கை சார்ந்த எந்த ஒரு முடிவையும் எடுக்கும் உரிமை பிரிட்டனி ஸ்பியர்சுக்கு மறுக்கப்பட்டது.



குறிப்பாக தனது நீண்டகால காதலரான நடிகரும், உடற்பயிற்சி பயிற்சியாளருமான சாம் அஸ்காரியை (27) திருமணம் செய்து கொள்ள அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.



எனவே தனது தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேற கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.



இதுதொடர்பான வழக்கு விசாரணை நீண்ட காலமாக நடந்து வந்த நிலையில் பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது தந்தையின் பாதுகாப்பில் இருந்து வெளியேற அனுமதி வழங்கி கோர்ட்டு அண்மையில் தீர்ப்பளித்தது.



இந்த நிலையில் பிரிட்னி ஸ்பியர்ஸ் தனக்கும் தனது நீண்டகால காதலர் சாம் அஸ்காரிக்கும் நிச்சயதார்த்தம் முடிந்ததாக தற்போது அறிவித்துள்ளார். இது தொடர்பாக காதலர்கள் இருவரும் நிச்சயதார்த்த மோதிரத்துடன் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். எனினும் திருமணம் எங்கு, எப்போது நடைபெறும் என்பதை அவர்கள் அறிவிக்கவில்லை.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb05

கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிர

Mar23

உக்ரைனின் தலைநகரான கிய்வ் பகுதியிலுள்ள ஒரு பள்ளியை ரஷ

Jan03

ஜம்மு- காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் இந்திய எல்லைக

Aug18

ஆப்கானிஸ்தானை 

சீனாவின் கன்சூ மாகாணம், பேயின் நகர் அருகே உள்ள சுற்றுல

Sep17

சீனாவில் முதன்முறையாக குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்

Sep24

இரண்டு மாதங்களில் முதல் முறையாக இங்கிலாந்து மற்றும் வ

Mar23

உக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் ஊடுருவியுள்ள நிலையில், ரஷ்ய

Jun15