More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • யாருக்கெல்லாம் நகை கடன் தள்ளுபடி இல்லை ? : முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!...
யாருக்கெல்லாம் நகை கடன் தள்ளுபடி இல்லை ? : முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!...
Sep 13
யாருக்கெல்லாம் நகை கடன் தள்ளுபடி இல்லை ? : முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!...

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இன்று பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடிசெய்யப்படும் என்றார். தொடர்ந்து பேசிய அவர் , நகை கடன்கள் தள்ளுபடி அறிவிப்பு குறித்து தகுதியான நபர்களை கண்டறிவதற்காக கடந்த ஒரு மாத காலம் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெற்ற அனைத்து நகைகள் பற்றிய பெயர் ,கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கடன் கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண் ,குடும்ப அட்டை எண் ,ஆதார் எண், முகவரி ,அலைபேசி எண் உள்ளிட்ட 51 விதமான தகவல்களை சேகரித்து தொகுக்கப்பட்டு கணினி மூலம் விரிவான ஆய்வு செய்யப்பட்டன.



அவ்வாறு புள்ளிவிபரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டதில் நகைகள் வழங்கப்பட்டதில் பல்வேறு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன . நகை கடன் தள்ளுபடி செய்து சரியான தகுதியான ஏழை, எளிய மக்கள் மட்டுமே பயன் பெற வேண்டும் என்று இந்த அரசு கருதுகிறது. எனவே 5 பவுனுக்கு குறைவாக நகை கடன் பெற்றவர்கள் சில நேர்வுகளில் தள்ளுபடி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என கருதப்படுகிறது.



எடுத்துக்காட்டாக 2021ஆம் ஆண்டு பயிர் கடன் தள்ளுபடி வழங்கப்பட்டதில் பயன்பெற்றவர்கள் ஒரே குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் ஒரு கூட்டுறவு நிறுவனத்திலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு நிறுவனத்திலிருந்தோ, ஒன்றுக்கும் மேற்பட்ட கடன்கள் மூலம் 5 பவுனுக்கு மேல் நகைகளின் பேரில் கடன் பெற்றவர்கள்; தவறாக அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டை பெற்று அவற்றைப் பயன்படுத்தி, நகை கடன் பெற்றவர்கள் ; இது போன்ற மேலும் சில நேர்வுகளில் வழங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்ய இயலாது. இதுகுறித்த விவரம் வழிகாட்டு முறைகளை கூட்டுறவுத்துறை இன்னும் ஓரிரு நாளில் வெளியிடும்.



நகை கடன் தள்ளுபடி குறித்த தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு வெளிவந்தவுடன் முறையற்ற வகையில் தள்ளுபடி பெற வேண்டும் என்கிற தவறான நோக்கத்தோடு நகைகளை பெற்றிருப்பதும், குறிப்பாக சில மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட சங்கங்களில் மீது தகுதியான நடவடிக்கையை அரசு எடுக்கும். தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஐந்து பவுனுக்கு உட்பட்ட நகை கடன்களை தள்ளுபடி செய்வதற்காக அரசுக்கு ஏற்படும் செலவு பூர்வாங்க மதிப்பீடுகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் 6 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். கூட்டுறவு நிறுவனங்கள் நேர்மையாக, திறமையாக ஏழை விவசாயிகளும், நடுத்தர வர்க்கத்தினரும் பயன்பெறும் வகையில் செயல்பட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். முழுமையான கணினி மயமாக்கம் , கோர் பேங்கிங் போன்ற நவீன வசதிகளுடன் கூட்டுறவு நிறுவனங்கள் முறையாக கண்காணிக்கப்பட்டு எதிர்காலத்தில் சிறப்பாக நடத்தி செயல் படும் ” என்று தெரிவித்தார்.



 





வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul08

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனாவுக்கு எத

Jun20
Mar09

அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க.வுக்கு

Sep28

தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்த

May12

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 10.1 வீதம

Jul19

மத்திய பிரதேசத்தில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான

Mar06

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 சீட்டுதான் ஒதுக்கப்பட

Sep10

பன்வாரிலால் புரோகித் அவர்களை மரியாதையுடன் வழியனுப்ப

Feb03

இந்திய விமானப் படைக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 83 த

May24

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் ந

Jun17

தமிழக முதல்-அமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற முன்னர

Jul25

லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவர அரசு முயல வேண்டாம் எ

Mar21

அதிமுக முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் திமுக தலைவர

Oct10

லகிம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய உள்துறை இணையமைச்சர

Jul20