More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இறப்புக்கள் தடுப்பூசி எதுவும் போடாதவர்கள் மத்தியிலேயே ஏற்பட்டுள்ளது-ஆ. கேதீஸ்வரன்!
இறப்புக்கள் தடுப்பூசி எதுவும் போடாதவர்கள் மத்தியிலேயே ஏற்பட்டுள்ளது-ஆ. கேதீஸ்வரன்!
Sep 13
இறப்புக்கள் தடுப்பூசி எதுவும் போடாதவர்கள் மத்தியிலேயே ஏற்பட்டுள்ளது-ஆ. கேதீஸ்வரன்!

வடமாகாணத்தில் தற்போது 30 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கான கொவிட் தடுப்பூசி ஏற்றும்

பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதுவரை வடமாகாணத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் 547,150

பேருக்கு 1வது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என வைத்தியகலாநிதி ஆ. கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்



மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது



இது வடமாகாணத்தில் உள்ள 30 வயதிற்கு மேற்பட்டவர்களில்85வீதம்ஆகும். மேலும் 2வது தடுப்பூசி 401 ,494 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது 30 வயதிற்குமேற்பட்டவர்களில் 62வீதம் ஆகும். வடமாகாணத்தின் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் ஏறத்தாழ100,000 பேர் இதுவரை எந்தவொரு தடுப்பூசியும் பெற்றுக்கொள்ளவில்லை.





கடந்த ஓகஸ்ட் மாதம் நடுப்பகுதி முதல் வடமாகாணத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையும்

இறப்புக்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளது. வடமாகாணத்தில் இதுவரை மொத்தமாக 32,844

தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள்.



இவர்களில் 14,480 தொற்றாளர்கள் கடந்த ஓகஸ்ட்மாதத்திலும் 5,847 தொற்றாளர்கள் செப்ரெம்பர் மாதத்தின் முதல் 12 நாட்களிலும்இனங்காணப்பட்டுள்ளனர்.



இதேபோல வடமாகாணத்தில் கொவிட் தொற்று காரணமாக இதுவரை மொத்தமாக 578

இறப்புக்கள் பதிவு செய்யப்பட்டடுள்ளன. இவற்றில் 228 இறப்புக்கள் கடந்த ஓகஸ்ட் மாதத்திலும் 169

இறப்புக்கள் செப்ரெம்பர் மாதத்தின் முதல் 12 நாட்களிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள இறப்புக்களை ஆராயும்போது பெரும்பாலான இறப்புக்கள் தடுப்பூசி

எதுவும் போடாதவர்கள் மத்தியிலேயே ஏற்பட்டுள்ளது.



தடுப்பூசி ஏற்றிக்கொள்வதன் மூலம்கொவிட் தொற்று ஏற்பட்டாலும் அதன் தாக்கத்தையும் இறப்புக்களையும் குறைக்கக்கூடியதாக இருக்கும்.எனவே தற்போது ஏற்பட்டுள்ள இந்த அபாயகரமான பெருந்தொற்று சூழலிலே உயிரிழப்புக்களை குறைப்பதற்கு எம்மிடமுள்ள முக்கியமான உபாயம் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதே. தற்பொழுது

வடமாகாணத்தில் 5 மாவட்டங்களிலும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதுவரை

தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் அனைவரையும் உடனடியாக சென்று தடுப்பூசியை

பெற்றுக்கொள்ளுமாறு வினயமாக கேட்டுக்கொள்கின்றோம்.-என்றார்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb17

கம்பளை பொது சுகாதார பரிசோதகர்களினால் மூன்று தடவைகளை PCR

Feb09

மட்டக்களப்பு மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தனிமைப்ப

Jul17

நெருக்கடி நிலைமைகளின் போது பொருளாதாரத்தை வலுப்படுத்

Jan19

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தற்போது

Mar03

அரச மற்றும் தனியார் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்

Mar25

நாட்டில் மனித படுகொலைச் சம்பவங்களின் எண்ணிக்கையில் த

Sep16

அனைத்து அரசாங்கப் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவிலும் உள

Jun16

அரசாங்கம் ஏழைகளின் கண்ணீரில் சவாரி செய்கிறது என தமிழ்

Oct08

'குருந்தூர்மலை பிரச்சினை உள்ளிட்ட தமிழ் மக்களின் மு

Jun12

யாழ்ப்பாணம் கண்டி நெடுஞ்சாலையில் மிருசுவில் அமைந்தி

May02

புதிய மின்சார இணைப்புக்கள் வழங்குவது குறைக்கப்பட்டு

Jan22

சிறுநீரகத்தில் கல் சேர்ந்திருப்பதை முன்கூட்டியே கண்

Mar10

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத

Jan20

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மத உணர்வுகளை மதிக்

May25

சாவகச்சேரியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒரு