More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • படகில் போட்டோ ஷூட்: மலையாள டி.வி நடிகை கைது!
படகில் போட்டோ ஷூட்: மலையாள டி.வி நடிகை கைது!
Sep 13
படகில் போட்டோ ஷூட்: மலையாள டி.வி நடிகை கைது!

 கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து மண்டல காலத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தங்க அங்கி கொண்டு செல்லப்படுகிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு ‘வள்ள சத்யா’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பாரம்பரிய படகுகளில் பக்தர்கள் பம்பை ஆறு வழியாக கோயிலுக்கு செல்வார்கள். கடுமையாக விரதமிருக்கும் பக்தர்கள் மட்டுமே இப்படகில் செல்ல முடியும். இது  ‘பள்ளி ஓடம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தப் படகில் ஏறுவதற்கு பெண்களுக்கு அனுமதி கிடையாது.



இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாள டி.வி நடிகை நிமிஷா இப்படகில் ஏறி போட்டோ ஷூட் நடத்தினார். காலில் ஷூ மற்றும் ஜீன்ஸ் பேண்ட், டிசர்ட் அணிந்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து  நிமிஷா, தனக்கு இதன் பாரம்பரிய பெருமை தெரியாது என்று கூறி மன்னிப்பு கேட்டார். இதற்கிடையே மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக கூறி, ஆரன்முளா கோயில் நிர்வாகிகள் ஆரன்முளா போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் நிமிஷா மற்றும் அவருக்கு உதவி செய்த உன்னி என்பவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். பிறகு விசாரணைக்காக நிமிஷா, உன்னி இருவரும் ஆரன்முளா போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்கள். விசாரணைக்குப் பிறகு இருவரையும் போலீசார் கைது செய்தனர். பிறகு ஜாமீனில் விடுவித்தனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr30

விக்னேஷ் சிவன் பார்த்து பார்த்து ரசித்து இயக்கிய திரை

Jun12

மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடி

Jan24

பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இந்த

Sep16

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படத்தின் 2 பாகங

Jun07

விக்ரம் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் கலக்கிவரும் சூப்ப

Oct09

காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன

Feb07

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர்

Jun22

நடிகர் சிம்பு, உடல் எடையை குறைத்த பின்னர் படங்களில் பி

Feb21

சமீபத்தில் தமிழகமெங்கும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற

Jul06

திரைப்படங்களை கட்டுப்படுத்தும் வகையில் ஒளிப்பதிவு ச

Jul03

நடிகையான வனிதா, பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன

Feb07

விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக்

Jan29

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொடர்ந்து ஹாட்ஸ்டாரில் 24

Dec28

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவ

Jan19

இசையமைப்பாளர் இளையராஜா மக்களால் பெரிய அளவில் கொண்டாட