வடக்கு வசீரிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதலில் 2 பாகிஸ்தானிய வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
வடக்கு வசீரிஸ்தானில் தோசள்ளி பகுதியில் பாகிஸ்தானிய பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் இருந்தபோது, சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று திடீரென வெடிக்க செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தில் ஜியா அக்ரம் (வயது 25) மற்றும் முசாவர் கான் (வயது 20) என இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
இதனை தொடர்ந்து, அந்த பகுதியை ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்து தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன்பின் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை தேடி கண்டறியும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.