More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம்- வெங்கையா நாயுடு பேச்சு!
தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம்- வெங்கையா நாயுடு பேச்சு!
Sep 09
தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம்- வெங்கையா நாயுடு பேச்சு!

ஆந்திரா மாநிலத்தில் உள்ள கிரியா பல்கலைக்கழகத்தில் மானுடவியல் நவீன கல்விக்கான மோட்டூரி சத்தியநாராயணா மையத்தை திறந்துவைக்கும் நிகழ்ச்சியில், சென்னை கிண்டி ராஜ்பவனில் இருந்து ஆன்லைன் வழியாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று பங்கேற்றார். அந்த மையத்தை திறந்துவைத்து, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:-



மகாத்மா காந்தியின் தீவிர ஆதரவாளரும், தோழருமான மோட்டூரி சத்யநாராயணா, வாழ்க்கையின் அனைத்து மட்டத்திலும் இந்திய மொழிகளை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியவர்களில் முக்கியமானவர் ஆவார். இந்தி மொழியை தென்னிந்தியாவில் பரப்புவதை தமது வாழ்நாளின் முக்கியப் பணியாக கருதி செயல்பட்டு வந்ததுடன், பல்வேறு வெளியீடுகள் மூலம், அவரது தாய்மொழியான தெலுங்கையும் ஊக்குவித்து வந்தார். தெலுங்கு மொழி சமிதியின் நிறுவன செயலாளராகவும் அவர் இருந்தார்.



இந்திய மொழிகளுக்கு உரிய முக்கியத்துவத்தை நாம் அளிக்கவேண்டும். குறிப்பாக, நமது தாய்மொழிக்கு, கல்வி மற்றும் நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் முக்கியத்துவம் அளிப்பது அவசியம். நமது கலாச்சார பாரம்பரியத்தில், மொழி ஒரு மிக முக்கியமான அம்சம் என்பதை நாம் எப்போதும் நினைவில் வைத்திருக்கவேண்டும். மொழிதான் நமக்கு அடையாளம், சுயமரியாதையை வழங்குவதோடு, நாம் யார் என்பதையும் வெளிப்படுத்துகிறது. எனவேதான், உங்களது தாய்மொழியில் பேசுவதை பெருமையாகக் கருதுங்கள் என்று நான் அடிக்கடி கூறிவருகிறேன்.



புதிய தேசிய கல்விக்கொள்கை-2020 ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட ஆவணம் என்பதோடு, பரவலான கலைக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, நவீன காலத்துக்கு ஏற்ப கல்வியில் பன்முக அணுகுமுறையை பின்பற்றுவதிலும் சிறப்பு கவனம் செலுத்துகிறது. இந்திய கல்வி முறையை பிரித்தெடுத்து, ‘தொழில்ரீதியான மற்றும் தாராள கல்வி’ முறைகளுக்கு இடையிலான கடினமான மற்றும் செயற்கைத் தடைகளை தகர்த்தெறிவதே இதன் நோக்கம் ஆகும்.



குழந்தைகளிடம், அவர்களது இளமை பருவத்திலிருந்தே கலை, இலக்கியம் மற்றும் சமூக அறிவியல் பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்தி ஊக்குவிக்குமாறு பெற்றோர்களை கேட்டுக்கொள்கிறேன். நாட்டிலுள்ள தலைசிறந்த அறிவியல் மற்றும் என்ஜினீயரிங் கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக, மொழிப்பாடங்கள் மற்றும் சமூக அறிவியல் போன்ற அத்தியாவசியப் பாடங்களை படிப்பதை நாம் புறக்கணித்துவிடுகிறோம்.



இவை தவிர, குருட்டுப்பாடமாக படிப்பது, குழந்தைகளின் படைப்பாற்றலைச் சிதைத்துவிடும். மனிதகுலம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு புதுமையான தீர்வுகாணக்கூடிய என்ஜினீயரிங், டாக்டர் மற்றும் விஞ்ஞானிகளை உருவாக்கவேண்டும்.



இவ்வாறு அவர் கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul27

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர

Jul04

சென்னை மெரினா கடற்கரை சாலை நேற்று காலை வழக்கம்போல் பர

Mar27

கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்தவர் பாரதிராஜா இவர

Mar03

பல படங்களிலும் அண்ணன் - தங்கை சம்மந்தப்பட்ட பாசப்பிணை

Mar14

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் த

Feb11

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்த

Jan25

அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா எதிர்வரு

Apr25

சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்

Oct24

பிரதமர் மோடி ஆண்டு தோறும் எல்லையில் பாதுகாப்பு பணியில

Jul24

பளு தூக்குதல் - பெண்கள் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியா வீ

Jul13

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது, தாளமொக்கை ஆத

Apr24

உள்துறை மந்திரி அமித்ஷா இன்று புதுச்சேரி செல்கிறார்.

Aug08

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 13ம் தேதி திமு

Sep04
Jan01

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதமர் உதவி தொகை