More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • பள்ளிக்கு விடுமுறை அளித்த தலைமையாசிரியர்: விளக்கம் கேட்டு கலெக்டர் நோட்டீசு!!!
பள்ளிக்கு விடுமுறை அளித்த தலைமையாசிரியர்: விளக்கம் கேட்டு கலெக்டர் நோட்டீசு!!!
Sep 08
பள்ளிக்கு விடுமுறை அளித்த தலைமையாசிரியர்: விளக்கம் கேட்டு கலெக்டர் நோட்டீசு!!!

கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே உள்ள பொரணி அரசு மேல் நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் டாக்டர்களின் ஆலோசனைபடி வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.



இதையடுத்து, மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் சுகாதாரத்துறையினர் அந்த பள்ளிக்கு சென்று மற்ற ஆசிரியர்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.



இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் பொரணி அரசு மேல்நிலை பள்ளிக்கு நேற்று சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளிக்கு மாணவர்கள் யாரும் வரவில்லை. இதுகுறித்து தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சண்முகசுந்தரத்திடம் கலெக்டர் கேட்டபோது, அவர் பள்ளிக்கு இன்று (நேற்று) விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.



மேலும் ஆசிரியர்களில் ஒரு சிலர் மட்டுமே வந்திருந்த நிலையில், பிற ஆசிரியர்கள் எங்கே? என கலெக்டர் கேட்டபோது அவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதால் பள்ளிக்கு வரவில்லை என கூறினார்.



இதனைதொடர்ந்து அங்கிருந்த மாவட்ட கல்வி அலுவலர் பராசக்தியிடம் பள்ளிக்கு விடுமுறை விட அனுமதி அளித்து உத்தரவு ஏதும் வழங்கப்பட்டதா? என கேட்டார். அப்போது அவர் இல்லை என்று கூறினார்.



இதையடுத்து பொறுப்பு தலைமை ஆசிரியரிடம் தனது கவனத்துக்கு கொண்டுவராமலும், கல்வித்துறையின் அனுமதி பெறாமலும் தன்னிச்சையாக முடிவெடுத்து பள்ளிக்கு விடுமுறை விட்டது ஏன்? என்பது குறித்தும், ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல் இருந்தது ஏன்? என்பது குறித்தும் மாவட்ட கல்வி அதிகாரி விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப கேட்டுக்கொண்டார்.

 



இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug05

கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உண்மையான இறப்பு எண்ணிக்

Jul03

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அரசியலை விட்டு ஒதுங்கி

Nov21

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சோழ மாநகர

Sep04

வடகிழக்கில் பல்வேறு இனக்குழுக்களின் பயங்கரவாதத்தை ம

Jun10

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து <

Oct02

தேசிய தந்தை மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் விழா ந

Feb07

உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தின் தபோவன் பக

Jul07

பீகார் மாநிலத்தின் முங்கர் மாவட்டத்தில் உள்ள கொத்வான

Jul06