More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு!
சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு!
Sep 08
சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு!

ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய பகுதிகளிக்கு செல்லக்கூடிய பயணிகள் பயணம் செய்யும் 72 மணி நேரத்திற்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என சான்றுடன் வர வேண்டும் என அந்த நாடு நிபந்தனை விதித்து உள்ளது.



இந்த நிலையில் கொச்சி போன்ற விமான நிலையங்களில் வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு வசதியாக கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு பயணத்திற்கு முன்பாக கொரோனா சான்று வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைத்து சான்று வழங்க வேண்டும் என்று துபாய் செல்லும் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.



இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பன்னாட்டு முனையத்தில் அதிநவீன வசதியுடன் கூடிய ஆர்.டி.பி.சி.ஆர். மையம் அமைக்க உத்தரவிட்டார்.



இந்த நவீன பரிசோதனை மையம் கடந்த மாதம் 5-ந் தேதி முதல் பன்னாட்டு விமான முனையத்தில் செயல்பாட்டிற்கு வந்தது. இங்கு ரேபிட் ஆர்.டி.பி.சி.ஆர். நவீன பரிசோதனை கருவிகள் மூலம் பரிசோதனை முடிவுகளை விரைவில் அறிந்து கொள்ளும் வண்ணம் 3 விதமான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.



அதன்படி, 8 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவு தெரிய ரூ.900, 2 மணியில் இருந்து 4 மணி நேரத்தில் முடிவை அறிந்து கொள்ளை ரூ.2,500, 30 நிமிடத்தில் முடிவை அறிந்து கொள்ள ரூ.4 ஆயிரம் கட்டணம் செலுத்தி பயன்பெறலாம் என்ற திட்டம் அமலில் உள்ளது.



அதிலும் குறிப்பாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வரும் துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்லும் பயணிகள் கட்டாயமாக ரூ.4 ஆயிரம் கட்டணம் செலுத்தி பரிசோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.



இந்த நிலையில் 30 நிமிடத்தில் முடிவு தெரிய நிர்ணயிக்கப்பட்ட ரூ.4 ஆயிரம் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், அதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகளிம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்படி, மொத்த கட்டணத்தில் இருந்து ரூ.600-ஐ குறைத்து ரூ.3400 செலுத்தினால் போதும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar26

கொரோனா பரவலுக்கு பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி இன்ற

Jul03

சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ

Aug11

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 76 இடங்களில் 10 ஆயிரத்து 50 பேரு

Aug30

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப

Jul16

கர்நாடக அரசு ரூ.9 ஆயிரம் கோடியில் காவிரி ஆற்றின் குறுக்

Mar04

அன்றாடம் தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலைய

Apr01

நாம் தமிழர் முன்வைக்கும் மாற்றம் என்பது அதிமுகவை அகற்

Jan30

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினம் இன்று

Jun26

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்க

Jan29


தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கா

Feb11

அடுத்த சில மணிநேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யக்

Jul01

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு இன்று 72-வது பிறந்த

Mar06

தமிழக அரசியல் களத்தில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்

Jul22

கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜ