More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • பண பட்டுவாடா செய்யாததால் கொலை மிரட்டல் – அதிமுக மாஜி எம்.எல்.ஏ. மீது வழக்கு...
பண பட்டுவாடா செய்யாததால் கொலை மிரட்டல் – அதிமுக மாஜி எம்.எல்.ஏ. மீது வழக்கு...
Sep 06
பண பட்டுவாடா செய்யாததால் கொலை மிரட்டல் – அதிமுக மாஜி எம்.எல்.ஏ. மீது வழக்கு...

நடந்து முடிந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்யாததால் ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பவுன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளர்பவுன்ராஜ். இவர் இரண்டு முறை இதே தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்வானவர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி பெற்றார்.



வாக்காளர்களுக்கு முறையாக பணப்பட்டுவாடா செய்யததால் தான் தோல்வி அடைந்ததாக நிர்வாகிகளுக்குள் வாக்குவாதம் எழுந்திருக்கிறது. எடக்குடி கிராமத்து மக்களுக்கு பண பட்டுவாடா செய்யச்சொல்லி ஊராட்சி மன்றதலைவர் தங்கமணியிடம் கேட்டிருக்கிறார். தேர்தல் விதிமுறைகளை காரணம்காட்டி அவர் மறுத்திருக்கிறார். இதனால் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சொல்கிறார் தங்கமணி.



ஏப்ரல் -5ம் தேதி அன்று இதுகுறித்து தங்கமனி காவல் நிலையைத்தில் புகார் செய்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏப்ரல் 23ம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார்.



இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கீழமை நீதிமன்றத்தினை அனுகும்படி உத்தரவிட்டார். அதன் பின்னர் மாவட்ட நீதிமன்றத்தில் தங்கமணி வழக்குக் தொடுத்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி, பூம்புகார் தொகுதியில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பவுன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டதை அடுத்து, போலீசார் பவுன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug29

இந்திய  பிரதமர்  நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கட

Aug23

தமிழக சட்டப்பேரவை மூன்று நாள் விடுமுறைக்குப்பின் இன்

Sep03

பாராலிம்பிக் உயரம் தாண்டுத

Aug19
Apr22

மகாராஸ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள மருத்துவமனை ஒன்ற

Dec20

பாராளுமன்றத்தின் கடந்த கூட்டத்தில் ஒழுங்கீனமான நடந்

Jun22

அகில உலகத்துக்கு இந்தியா வழங்கிய பெருங்கொடைகளில் முக

Feb02

டெல்லியில் இஸ்ரேலிய தூதரகம் அருகே தாக்குதலில் ஈடுபட்

Feb02

இந்தியாவில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி

Jul02