More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • கினியாவில் அதிபா் தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டதாக ராணுவம் அறிவிப்பு!
கினியாவில் அதிபா் தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டதாக ராணுவம் அறிவிப்பு!
Sep 06
கினியாவில் அதிபா் தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டதாக ராணுவம் அறிவிப்பு!

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா நாடு, பிரான்ஸ் நாட்டிடமிருந்து 1958 -ம் ஆண்டு விடுதலை பெற்றது. அந்நாட்டில் கடந்த 2010-ம் ஆண்டு ஜனநாயக முறைபப்படி நடைபெற்ற முதல் தேர்தலில் ஆல்பா காண்டே வெற்றி பெற்று அதிபரானாா். தொடா்ந்து அதிபராக இருந்து வந்த அவா், 3-வது முறையாக கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று அதிபராகத் தொடா்ந்தாா். ஆனால் அவருக்கு எதிா்ப்பு வலுத்து வந்தது.



கினியாவின் அதிபர் ஆல்பா காண்டே பதவியேற்ற பின்னர், கினியா நாட்டில் இருந்து அலுமினியத்தின் தாது பொருட்களை ஏற்றுமதி செய்யும் பணிகள் மிக வேகமாக வளர்ச்சியடைந்தன. ஆனால் இந்த ஏற்றுமதியால் கினியா மக்கள் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.



இந்நிலையில், நேற்று அதிகாலை தலைநகா் கோனாக்ரியில் உள்ள அதிபா் மாளிகை அருகே கடுமையான துப்பாக்கிச்சூடு சப்தம் பல மணி நேரம் தொடா்ந்து கேட்டது. இதையடுத்து, அரசுத் தொலைக்காட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ராணுவ கா்னல் மமாடி டம்போயா, அதிபா் ஆல்பா காண்டே தலைமையிலான அரசு கலைக்கப்பட்டதாக அறிவித்தாா்.



அரசாங்கத்தை ஒரு தனி நபரிடம் ஒப்படைக்க இனியும் தாங்கள் விரும்பவில்லை. அரசாங்கத்தை இனி மக்களே வழிநடத்துவார்கள். நாட்டைக் காப்பற்ற வேண்டியது ஒவ்வொரு ராணுவ வீரனின் கடமை என அவர் குறிப்பிட்டார். இருப்பினும், அதிபரின் நிலை என்ன என்பது பற்றி அவா் எதுவும் தெரிவிக்கவில்லை.



கினியா ராணுவத்தின் இந்த செயல்பாடு குறித்து கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ், “துப்பாக்கியின் பலத்தால் அரசாங்கத்தைக் கைப்பற்றுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



இதற்கிடையே, ராணுவத்தின் ஒரு பிரிவினரின் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக கினியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அதிபரின் நிலை குறித்து பாதுகாப்பு அமைச்சகமும் தெரிவிக்காத நிலையில், அங்கு குழப்பம் நீடித்து வருகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr25

பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்டம் கடந்த 10-ம்

Mar14

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து 18 ஆவது ந

May20

உக்ரைனின் Luhansk பகுதியில் ரஷ்யப் படை வீரர்களின் முன்னேற

Mar14

போலந்து எல்லைக்கு அருகில், உக்ரைன் இராணுவ தளத்தின் மீ

May08

உக்ரைன் கிழக்கில் உள்ள லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள பாடச

Mar12

ரஸ்யாவின் ஆக்கிரமிப்பு போரை முடிவுக்கு கொண்டுவருவதற

Jun20

ஈரான் அதிபர் ஹசன் ரூஹானியின் பதவிக்காலம் முடிவடைந்தத

May10

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த மே

May18

காசா நகர் மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத

Apr26

ஓட்டோமான் பேரரசு என்பது துருக்கியர்களால் ஆளப்பட்ட ஒர

May12

இலங்கையில் மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலைமையில், இலங்கைக்

Mar29

பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியை காண சென்ற இளம்பெண

Mar14

உக்ரைன்-ரஷ்யா இடையே நிலவி வரும் போர் பதற்றத்திற்கு மத

Mar01

அவுஸ்திரேலியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது ரகமத

Mar09

நேட்டோ அமைப்பில் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உ