ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘தலைவி’. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனாவும், எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர்.
மேலும் சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகியுள்ள இப்படம், வருகிற செப் 10-ந் தேதி ரிலீசாக உள்ளது.
