அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, இந்தியா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய ஜி20 நாடுகளின் சுகாதாரத் துறை மந்திரிகளின் சந்திப்பு இத்தாலியில் நடைபெறுகிறது.
இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் இந்தியா சார்பில் சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பங்கேற்கிறார். இதற்காக இன்று இத்தாலி செல்லும் மன்சுக் மாண்டவியா வரும் 7-ம் தேதி வரை அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில் ஜி20 நாடுகளின் சுகாதாரத்துறை மந்திரிகள் சந்தித்துப் பேச உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.