More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • பிரதமர் மோடியுடன் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் சந்திப்பு!
பிரதமர் மோடியுடன் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் சந்திப்பு!
Sep 04
பிரதமர் மோடியுடன் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் சந்திப்பு!

தெலுங்கானா மாநில முதல் மந்திரி சந்திரசேகர ராவ் 3 நாள் பயணமாக கடந்த 1-ம் தேதி டெல்லி சென்றார். நேற்று முன்தினம் தெலுங்கானா ராஷ்டிர சமிதி அலுவலகத்துக்கான பூமி பூஜையில் பங்கேற்றார்.



இந்நிலையில், நேற்று அவர் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது, கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் கொடுத்தார்.



அதில் தெலுங்கானாவில் மாவட்டங்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் மாநிலத்துக்கான ஐ.பி.எஸ். அதிகாரிகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், கூடுதலாக 21 நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.



மேலும், நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் சாலை அமைப்பதற்கான நிதிச்சுமையை மத்திய அரசே முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும், பழங்குடியினர் பல்கலைக்கழகம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம், இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஆகியவற்றை அமைக்க வேண்டும், வாரங்கல் ஜவுளி பூங்காவுக்கு ரூ.1,000 கோடி மானிய உதவி அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளும் அந்த மனுவில் இடம்பெற்றுள்ளன.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec19

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட

Mar14

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால

Jul24

கடந்த 201 ஆம் ஆண்டு திருச்சியிலிருந்து கடலூர் நோக்கி செ

Mar25

கேரள சட்டசபை தேர்தல், ஏப்ரல் 6-ந் தேதி ஒரே கட்டமாக நடக்க

Jul05

உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் முஸ்லிம் ராஷ்ட்ர

Aug09

கேபினட் மந்திரிக்கு இணையான அந்தஸ்து வழங்கியதன் மூலம்

Sep04
Mar14

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

Oct10

ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டம் தங்பாவா பகு

Feb16

தினக்கூலி வேலை பார்க்கும் கேரளாவைச் சேர்ந்த 60 வயது முத

Mar30

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னை நொளம்பூர் பகுதியி

Mar28

ஆந்திராவில் நடந்த சாலை விபத்தில் 5 பெண்கள் உட்பட 8 தமிழ

Jul04