More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • அவசரகால சட்ட வர்த்தமானியை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெற வேண்டும் – சஜித் பிரேமதாஸ
அவசரகால சட்ட வர்த்தமானியை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெற வேண்டும் – சஜித் பிரேமதாஸ
Sep 03
அவசரகால சட்ட வர்த்தமானியை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெற வேண்டும் – சஜித் பிரேமதாஸ

ஜனநாயகத்தை வீழ்த்தி சர்வாதிகாரமிக்க பயணத்தை நோக்கி நகரும் அவசரகால சட்ட வர்த்தமானியை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெற வேண்டும்.



நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்க வேண்டுமாயின் நுகர்வோர் பாதுகாப்பு உரிமை சட்டத்திற்கு அமைய செயற்படலாம். அதனை விடுத்து ஜனாதிபதி அவசரகால சட்டத்தை அவரமாக அமுல்படுத்தியுள்ளதன் நோக்கம் என்ன என  சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ அறிக்கை வெளியிட்டுள்ளார்



அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,



அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு  அரசாங்கம் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இது அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகள் மற்றும் திறமையின்மையை மூடி மறைக்கும் தன்னிச்சையான  ஒரு செயற்பாடாக கருத வேண்டும்.



2003 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகாரச்சட்டத்தின்  மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க முடியும். ஆனால் அரசாங்கம் அதனை விடுத்து அவசரகால சட்டத்தை அவசரமான நிலையில் பிரகடனப்படுத்தியுள்ளமை  ஒரு ஆபத்தான நிலையை எடுத்துக்காட்டியுள்ளது.



ஜனநாயக கொள்கை மிக்க நாட்டை சர்வாதிகாரமிக்க நாடாக மாற்றியமைத்து மனித உரிமைகளுக்கு  சவால் விடுவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக உள்ளது என்பதை இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக விளங்கிக் கொள்ளலாம்.



அவசரகால சட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்தியிருப்பதால் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவடையாது. தடுப்பூசிகளையும் பெற முடியாது. பொருட்களின் விலையேற்றத்தையும், வெளிநாட்டு கையிருப்பின் அளவையும் கட்டுப்படுத்தாத அரசாங்கம்  நாட்டு மக்களை கட்டுப்படுத்த அவசரகால சட்டத்தை பயன்படுத்துகிறது.



ஜனநாயகத்தை வீழ்த்தி சர்வாதிகாரமாக பயணத்தை நோக்கி செல்லும் அவசரகால சட்ட வர்த்தமானியை ஜனாதிபதி மீளப் பெற வேண்டும். நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்க நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் உள்ளது. அச்சட்டத்திற்கு அமைய  சட்டவிரோதமாக பொருட்களை பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். அவசரகால சட்டத்தை கொண்டு முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளையும் முற்றாக எதிர்ப்போம்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun04
May11

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த வாரங்களுடன் ஒப்பிடு

Oct05

போதைப்பொருளை இல்லாதொழிக்க வேண்டியும் அதை விநியோகம் ச

May20

பொதுச் செலவினங்களை எளிதாக்கும் நோக்கில், அரசாங்கத்தி

Jan26

இலங்கை 5 இலட்சம் அஸ்ட்ராஜெனெகா கொவிட்-19 தடுப்பூசிகளை இ

Mar09

நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் 4 வருட கடூழிய சிறை

Oct01

எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் இலங்கையின

Jan09

 

கொழும்பு துறைமுக நகரத்தில் திறப்பு விழா!

Mar24

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா கட்டணம் தொடர்பி

May13

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் தனது கடமைகளை

Oct13

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோள விதைக

Jun06

இன்றைய தினம் குறித்த இறங்கு துறைக்கான கண்காணிப்பு விஜ

Feb02

திருகோணமலை பொது மயானத்தில் பொருத்தப்பட்டிருந்த எரிய

Sep26

போராட்டங்களை நடத்தி மக்கள் துன்புறுத்தப்பட்டால் பொல

Sep23

இலங்கையில்  தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தே