அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே பார்டியும், ரஷ்ய வீராங்கனை வெரா ஸ்வெனரேவா மோதினர்.
முதல் செட்டை ஆஷ்லே பார்டி 6-1 என எளிதில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் வெரா ஸ்வெனரேவா சுதாரித்துக் கொண்டு ஆடினார். ஆனாலும், 2-வது செட்டை 7-6 என ஆஷ்லே பார்டி வென்றார்.
இறுதியில், ஆஷ்லே பார்டி 6-1, 7-6 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், ஜப்பானின் நவாமி ஒசாகா, ருமேனியாவின் சிமோனா ஹாலெப், ஸ்பெயினின் கார்பின் முகுருஜா, எஸ்தோனியாவின் கயா கனேபி ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.