தமிழக சட்டசபையில் இன்று அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைப்பதற்கான சட்டமுன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார்.
இம்மசோதாவுக்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
கலைவாணர் அரங்கத்திற்கு வெளியே ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் உட்பட அதிமுகஎம்எல்ஏக்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.