More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது - ராஜ்நாத் சிங்...
எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது - ராஜ்நாத் சிங்...
Aug 31
எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது - ராஜ்நாத் சிங்...

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து ஆசியாவில் பல்வேறு நாடுகளில் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவி வருகிறது. குறிப்பாக, தலிபான்களால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.



இந்நிலையில், எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது என பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.



தேசிய பாதுகாப்பு தொடர்பாக பஞ்சாப் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற விரிவுரை நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:



ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் சூழ்நிலை நமது நாட்டின் பாதுகாப்பு குறித்த பல்வேறு புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆப்கானிஸ்தான் நிலவரத்தை நமது அரசு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. அங்கு நிலவி வரும் சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்தி இந்தியாவுக்குள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தேசவிரோத சக்திகள் ஊக்குவிக்கக் கூடாது என நமது அரசு விரும்புகிறது.



ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் மத்திய அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது என தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr04

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம

Sep08

இந்திய காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியக

Sep14

தமிழகத்தின் 14-வது ஆளுநராக மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர

Dec20

முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு மற்றும் அவரது உறவி

Mar09

அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க.வுக்கு

May18

கேரள மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம்

Apr02

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், டெல்லி வ

Jun18