More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • புயலால் சேதமடைந்த கடற்றொழில் உபகரணங்களுக்கு நஷ்டஈடு -
புயலால் சேதமடைந்த கடற்றொழில் உபகரணங்களுக்கு நஷ்டஈடு -
Aug 30
புயலால் சேதமடைந்த கடற்றொழில் உபகரணங்களுக்கு நஷ்டஈடு -

புரெவிப் புயலினால் சேதமடைந்த கடற்றொழில் உபகரணங்களுக்கான நஷ்டஈடுகள் விரைவில் வழங்கப்படவுள்ளன.



இதுதொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய நிலையில், நஷ்டஈடுகளை வழங்குவதற்கான ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



அதனடிப்படையில், புரெவிப் புயல் காரணமாக தொழில் உபகரணங்கள் பாதிக்கப்பட்ட மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள், நஷ்டஈட்டு தொகையினைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.



கடந்த வருடம் டிசெம்பர் மாதம் வீசிய புரெவிப் புயலினால் வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களின் தொழில் உபகரணங்கள் பகுதியளவிலும் முழுமையாகவும் பாதிக்கப்பட்டிருந்தன.



குறித்த பாதிப்புக்கள் தொடர்பான முழுமையான மதிப்பீட்டு அறிக்கையினை சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் ஊடாகப் பெற்றுக்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் சுமார் 58 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட பெறுமதியான நஷ்டஈட்டினை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்றினை சமர்ப்பித்திருந்தார்.



குறித்த அமைச்சரவைப் பத்திரம் தொடர்பாக ஆராய்ந்த அமைச்சரவை, குறித்த நஷ்டஈட்டினை வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு வழங்குதற்கு அங்கீகாரம் அளித்த நிலையில், அவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.



ஏற்கனவே, புரெவிப் புயலினால் பாதிப்படைந்த வீடுகளை புனரமைப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கான உடனடி உலர் உணவு போன்ற நிவாரண நடவடிக்கைகளுக்காகவும் அரசாங்கத்தினால் சுமார் 36 மில்லியனுக்கும் மேற்பட்ட நிதியுதவி வழங்கப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பரிந்துரைக்கு அமைவாக கடற்றொழில் உபகரணங்களுக்கான நஷ்டஈட்டு தொகை வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May28

யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்

Feb10

  கம்பளை கலஹா பகுதியில் 12 வயதான யோகராஜா கலைவாணி எனும்

Dec27

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரை

Sep28

வெகுஜன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் கிராமத்திற்கு தகவல்

Sep27

இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய கு

Feb25

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் சுகாதாரப்

Mar08

இலங்கையில் முதலீடு செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு நீண

Jan26

ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு கொடுக்

Feb09

இலங்கையின் நீதியமைச்சினால், முன்மொழியப்பட்ட பயங்கரவ

Apr08

சந்தையில் தற்போது காலாவதியான மற்றும் மனித நுகர்வுக்க

Feb21

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழ்ப்பாண நகரின்

Jan23

இந்தியாவில் இருந்து 600,000 ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொர

Jan30

வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்க

Oct22

நிலக்கரி தாங்கிய கப்பல் ஒன்று நாட்டிற்கு வருகை தரவுள்

Apr09

இலங்கையில் சத்திரசிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்பட