More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி போர்க்கொடி!
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி போர்க்கொடி!
Aug 30
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி போர்க்கொடி!

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை மக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அரசு எடுத்துள்ள தீர்மானத்தால் மக்கள் பாரிய விளைவுகளை எதிர்கொண்டுள்ளனர்.



என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது:-



நாடு தற்போது முகங்கொடுத்துள்ள கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.



இவ்வாறான நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.



அதேபோன்று அத்தியாவசிய மருந்துகளின் விலையும் அதிகரித்துள்ளது.



இவை தொடர்பில் அரசு எடுத்துள்ள தீர்மானத்தால் மக்கள் பாரிய விளைவுகளை எதிர்கொண்டுள்ளனர்.



தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கும் கொடுப்பனவையும் அரசு குறைத்துள்ளது.



அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பிலேயே அண்மைய நாட்களில் அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றது.



உலக சந்தையில் டொலரின் பெறுமதி அதிகரித்தமை, ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமை, ஏற்றுமதி, இறக்குமதி வரையறுக்கப்பட்டமை, கொரோனாத் தொற்றால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி போன்றவையே அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்துக்குக் காரணம் என்று அரசு தொடர்ச்சியாகக் கூறி வருகின்றது.



தினமும் நுகர்வுக்குப் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களான பால்மா, சீனி, எரிவாயு, மண்ணெண்ணெய் அதேபோன்று எரிபொருட்களின் விலையேற்றத்தை மக்களால் எதிர்கொள்ள முடியவில்லை.



இதில் பிரதான காரணியாக சீனியின் விலையேற்றம் காணப்படுகின்றது.



அதேபோன்று பால்மா, பிரதான ஒளடதங்களுக்கான தட்டுப்பாடு பாரிய பிரச்சினையாக உள்ளது.



மக்கள் தங்களது பொறுப்பை தாங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது போலவே அரசு செயற்பட்டு வருகின்றது.



துறைசார்ந்த அமைச்சர் தன்னால் எதனையும் செய்ய முடியாது என்று கூறினார்.



தற்போதைய நெருக்கடிச் சூழலில் இவ்வாறான ஒரு பதிலையா மக்கள் அரசிமிருந்து எதிர்பார்க்கின்றனர் என்பதே எமது கேள்வியாக உள்ளது.



அரசு தனது பொறுப்பை எவ்வாறு கைவிட்டுள்ளது என்பது இதனூடாகத் தெரியவருகின்றது – என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul27

இலங்கையில் நாள் ஒன்றில் அதிகூடிய கொவிட்-19 தடுப்பூசிகள

Sep14

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல்

Sep24

நியூயோர்க்கில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள ஐக்கிய நாட

Feb02

வைத்தியர் கயான் தந்த நாராயணனின் மரணத்தின் மூலம் கொரோன

Sep16

புகழ்பெற்ற இலக்கியத் திறனாய்வாளரும் ஊடகத்துறையில் ப

Mar09

பதுளை − ஹாலிஎல பகுதியில் பாடசாலை மாணவியை கோடாரியால்

Oct25

WhatsApp சமூக ஊடக வலையமைப்பில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக

Jul06

சுகாதாரத்துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும

Jan13

இந்த மாதத்தில் எந்த நேரத்திலும் எரிபொருள் தட்டுப்பாட

Oct16

யாழ்ப்பாண நகர் பகுதியில் ஆயிரம் போதை மாத்திரைகள் மற்ற

Oct14

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞான

Sep20

பெருந்தோட்டப் பிரதேசங்களில் நீரேந்து பகுதியில் இருந

May09

பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து அலரி மா

Apr08

கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் - காங்கேசன்து

Oct21

கோழி இறைச்சியின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட