More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • காபூல் விமான நிலைய வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 170 ஆக அதிகரிப்பு!
காபூல் விமான நிலைய வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 170 ஆக அதிகரிப்பு!
Aug 29
காபூல் விமான நிலைய வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 170 ஆக அதிகரிப்பு!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாக கைப்பற்றியுள்ள நிலையில் அந்நாட்டில் இருந்து வரும் 31-ம் தேதிக்குள் அமெரிக்க படைகள் முழுவதும் வெளியேற உள்ளன. 



தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதால் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு குடிமக்களை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் விமானம் மீட்டு வருகின்றன. சொந்த நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் ஆப்கானியர்களையும் பல நாடுகள் மீட்டு வருகின்றன 



இந்த மீட்புப் பணிகள் காபூல் விமான நிலையத்தில் இருந்து நடைபெறுகிறது. இதற்காக காபூல் விமான நிலையத்தை அமெரிக்கப் படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளன.



இதற்கிடையில், மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் காபூல் விமான நிலையத்தை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தினர். 



காபூல் விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஹரசன் பிரிவு பயங்கரவாதியால் நடத்தப்பட்ட இந்த தற்கொலைப்படை தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.



இந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 13 பேர் அமெரிக்க பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் ஆகும். எஞ்சியோர் ஆப்கானிஸ்தான், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் ஆகும். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov08

ஆப்கானிஸ்தானில் வன்முறையால் இந்த ஆண்டின் முதல் 6 மாதங

May26

உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ்

Feb24

எகிப்து நாட்டின் 3-வது மிகப்பெரிய நகரமான அலெக்சாண்டிர

Mar12

உக்ரைனுக்கு அமெரிக்கா படைகளை அனுப்பாது என்று அமெரிக்

Apr03

 

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் கடந்த சில

Sep08

அமெரிக்காவில் நியூயார்க் நகர் புரூக்ளின் பகுதியில் ப

Aug23

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி உள்ள

Mar08

ஹாங்காங்கின் தேர்தல் சீர்திருத்தங்களை மாற்றியமைத்தத

Jan04

தைவானின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது ஹுயல

May09

உக்ரைன் மீது தற்போது மேற்கொள்ளப்படும் சிறப்பு இராணுவ

Aug13

ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு அரசுக்கும் தலிபான்களுக்கு

May31

தனது திருமண நிகழ்விற்கு தாமதமாக சென்ற மணப்பெண் ஒருவர்

Jun12

 நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் எரிபொருள் தேவையால், ரஷ்ய

May15

உக்ரைன் புதிய, நீண்டகால போர் கட்டத்திற்குள் நுழைவதாக

Jan27


அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான &