More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • காபூல் விமானநிலையத்தில் 36 மணி நேரத்துக்குள் பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம் - அதிபர் பைடன்...
காபூல் விமானநிலையத்தில் 36 மணி நேரத்துக்குள் பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம் - அதிபர் பைடன்...
Aug 29
காபூல் விமானநிலையத்தில் 36 மணி நேரத்துக்குள் பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம் - அதிபர் பைடன்...

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து அந்நாட்டில் தங்கள் நாட்டு குடிமக்களை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் விமானம் மூலம் மீட்டு வருகின்றன. சொந்த நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் ஆப்கானியர்களையும் பல நாடுகள் மீட்டு வருகின்றன. 



இந்த மீட்பு பணிகள் காபூல் விமான நிலையத்தில் இருந்து நடைபெறுகிறது. இதற்காக காபூல் விமான நிலையத்தை அமெரிக்க படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளன.



மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் காபூல் விமான நிலையத்தை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தினர். விமான நிலைய நுழைவு வாயிலில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கோரசன் பிரிவு பயங்கரவாதியால் நடத்தப்பட்ட இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உள்பட 170 பேர் உயிரிழந்துள்ளனர்.



இதற்கிடையே, காபூல் விமான நிலையத்தைக் குறிவைத்து மற்றொரு பயங்கரவாத தாக்குதல் நடைபெறலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அதிபர் ஜோ பைடனிடம் அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது



இந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் அடுத்த 24 மணி முதல் 36 ம்ணி நேரத்துக்குள் பயங்கரவாத தாக்குதல் நடைபெறலாம் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்த எச்சரிக்கையை அடுத்து காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep25

 ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான் தீவ

Mar19

உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையி

Mar09

உக்ரைனின் கார்கிவ் நகருக்குள் ரஷ்ய துருப்புக்கள் நுழ

Jun13

ஜி7 கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு, பிரிட்டனின் கார்ன

Jun10

 நாட்டின் 22 வீதமான மக்களுக்கு 

ரஷ்யா-உக்ரைன் இடையே வெடித்த போரில் இதுவரை உக்ரைனை சேர

May09

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லருடைய ஜெர்மனியின் நாசிச பட

Feb02

ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித்

Jan19

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவுச

Mar29

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) ஆட்சியில் நீடிக்

Mar05

விளாடிமிர் புடின் ஒரு தனி மனிதராக நின்று ரஷ்ய இராணுவத

Mar30

சூரியனில் பூமியை விட 20 மடங்கு பெரிய அளவிலான கருமையான ப

Aug02

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை

Jun01

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் நடைபெற்ற பட்டமளி

Feb28

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா க