More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கொடூரமாக தாக்கி மனைவியின் முன்னிலையில் கொலை செய்யப்பட்ட கணவன்!..
கொடூரமாக தாக்கி மனைவியின் முன்னிலையில் கொலை செய்யப்பட்ட கணவன்!..
Jan 20
கொடூரமாக தாக்கி மனைவியின் முன்னிலையில் கொலை செய்யப்பட்ட கணவன்!..

களுத்துறை வடக்கு பிரதேசத்தில் மனைவியின் முன்னிலையில் ஐந்து பிள்ளைகளின் தந்தையான கணவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.



இவ்வாறு கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற 6 சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.  



55 வயதான தனது கணவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அவரது மனைவி ரஞ்ஜினி எதுத்சூரிய என்பவரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.



தனது கணவனின் தலையில் மேற்கொள்ளப்பட்ட மிக கொடூரமான தாக்குதலில் படுகாயமடைந்தவர் 18ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.



கணவர் சம்பவ தினத்திற்கு முதல் நாள் கல்பாத்த, பருவபொல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட நிலையில் அன்றைய தினம் இரவு 12 மணியளவில் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.



இதன் போது சிலர் தன் முன்னிலையில் கணவனை கொடூரமாக தாக்கியதாகவும் ஒருவர் அவரது கழுத்தை நெறித்ததாகவும் மனைவி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.



இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை அடையாளம் காட்டியுள்ள நிலையில் அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பி சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.



சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar16

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் போர் தீவிரமடைந்துள்ள நில

Apr05

அரசாங்கம் வனப்பாதுகாப்பு சட்டத்திற்கு முரணாக சிங்கர

Jan21

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி முதல் மேல் மாகாணத

Jun26

நாட்டில் மேலும் சிலப்பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள

Jul07

காணாமல் ஆக்கப்பட்டோருக்குத் தீர்வு கிடைக்கும் என எமத

Sep23

யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரை பகுதிய

Feb08

தனியார் பேருந்து ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போரா

Mar10

இலங்கையில் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட அல்லது

Sep27

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமா

Mar12

அடுத்த 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் பல த

Sep19

நாட்டை பழைய நிலைமைக்கு கொண்டுவர  10 வருடங்கள் எடுக்கு

Jan21

இலங்கையில் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் விமான நிலை

Oct08

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாட்டில் ஸ்திரத்தன்மைய

Mar15

இலங்கையில் தீவிரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என இங்கில

May21

இன்று இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மண