More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இருளில் மூழ்க போகும் இலங்கை..
இருளில் மூழ்க போகும்  இலங்கை..
Jan 19
இருளில் மூழ்க போகும் இலங்கை..

மின்சார துண்டிப்பு பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் மின்சார சபை மற்றும் கனியவள கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளதக்க செய்திகள் வெளியாகியுள்ளன.



களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்குத் தேவையான டீசல் பற்றாக்குறை காரணமாக அந்த மின்னுற்பத்தி நிலையத்தின் ஒரு பிரிவின் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளன. இதன் காரணமாக மேல் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் நேற்றிரவு மின்சார துண்டிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது .குறித்த மின்னுற்பத்தி நிலையத்தின் பாதிப்பு காரணமாகத் தேசிய மின் கட்டமைப்பில் 165 மெகாவோட் மின்சாரத்திற்கான பற்றாக்குறை நிலவுகின்றது.



அதேசமயம் எரிபொருள் இன்மையால் சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் நேற்று மதியம் தடைப்பட்டன. எவ்வாறாயினும் 900 மெற்றிக் டன் உலை எண்ணெய் கிடைக்கப்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



இதேவேளை, இன்று இரவு 10 மணிக்குள் சப்புகஸ்கந்த டீசல் மின்னுற்பத்தி நிலையத்திற்குத் தேவையான டீசல் கிடைக்கப்பறாவிட்டால் நிலையத்தின் செயற்பாடுகள் பாதிப்படையக்கூடும் என மின்சார பொறியியலாளர் தெரிவிக்கின்றனர்.



அதன்படி, சப்புகஸ்கந்த டீசல் மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் பாதிப்படையுமாயின் தேசிய மின் கட்டமைப்பில் மேலும் 150 மொகாவோட் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





 

அவ்வாறு ஏற்படுமாயின் சுமார் ஒன்றரை மணிநேரத்திற்கும் அதிக காலம் மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan27

போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகனத் தரிப்பிட பிரச்சி

Oct20

சட்டவிரோத மற்றும் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்

Oct07

நாவலப்பிட்டி ஹபுகஸ்தலாவ பிரதேசத்தில் வீடு ஒன்றிலிரு

Jul20

பயணிகளில் பலர் அத்தியாவசிய சேவை ஊழியர்கள் அல்ல என்பது

Oct07

வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை

Jan22

மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸா

Apr08

சந்தையில் தற்போது காலாவதியான மற்றும் மனித நுகர்வுக்க

Mar31

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் 10 வயதுடைய சிறுமி ஒருவ

Feb18

ஜெனிவா தீர்மானத்துக்கான இணை அனுசரணையிலிருந்து விலகி

Sep26

அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீள அமுல்படுத்த வேண்

Oct16

பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக அல்லாமல் ஜனநாயக வழியிலேய

Jan30

கொழும்பு, நுகேகொடை பிரதேசத்தில் உள்ள பௌத்த விகாரை ஒன்

Dec13

தியத்தலாவை இராணுவக் கல்லூரிக்குள் சுவரின் இடிபாடுகள

Apr30

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 75 மி.மீ.க்கு மேல் மழை ப

Apr04

நாடு முழுவதும் உள்ள ஆரம்ப பாடசாலைகளில் உள்ள மாணவர்ளுக