தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை சினேகா.
இவர் நடிகர் பிரசன்னாவை கடந்த 2012ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த காதல் தம்பதிக்கு விஹான் என்ற ஆண் பிள்ளையும், ஆத்யந்தா என பெண் பிள்ளையும் உள்ளார்கள்.
தனது குடும்பத்தில் எந்த ஒரு சுப நிகழ்வு நடந்தாலும், ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் நடிகை சினேகா.
அந்த வகையில் நேற்று தனது கணவர், மகன், மகள் என குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடியுள்ளார்.
அப்போது எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து, ரசிகர்கள் அனைவருக்கும் தனது பொங்கல் வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.