தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரை சேர்ந்தவர் ராம்குமார். இவர் மும்பையில் மத்திய ரிசர்வ் படையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஸ்ரீஷா என்பவருடன் திருமணமாகி 10 வருடமான நிலையில் சாக்ஷி (வயது 8) என்ற மகள் ஜானி(வயது 4) மகன் உள்ளனர்.
இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்காக கடந்த 4 நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பியுள்ளார். கணவர் வந்ததிலிருந்து மனைவி தினமும் தகராறுகொடுத்து வந்துள்ளார் .
நேற்று இரவு இதேபோல் தகராறு ஏற்பட்டதன காரணமாக மனமுடைந்த கணவர் ராம்குமார் இன்று அதிகாலையில் இரண்டு குழந்தைகளையும் எடுத்துச் சென்று விவசாய கிணற்றில் வீசிவிட்டு அருகே சென்று தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது .
காலையில் கணவன் மற்றும் குழந்தைகளை காணாததால் அதிர்ச்சி அடைந்த மனைவி பல இடங்களில் தேடி உள்ளார்.
இதற்கிடையில் விவசாய கிணற்றில் இரண்டு குழந்தைகள் பிணம் மிதப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்று பார்த்த போது தான் தன்னுடைய குழந்தைகல் என தெரியவந்தது.
மேலும் அதே பகுதியில் கணவன் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த மகபூப்நகர் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இருவருக்கும் இடையே தகராறு தான் காரணமா.? இல்லை வேறு ஏதேனும் காரணம் உள்ளதா போன்ற கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்தகராறு காரணமாக பெற்ற குழந்தைகளை கிணற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.