திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இலங்கை தனித்து அபிவிருத்தி செய்து நிர்வகித்தால் எதிர்வரும் காலங்களில் ஏனைய நாடுகளுக்கு கடன் வழங்கக் கூடியளவிற்கு இலங்கையின் பொருளாதாரம் மேம்பாடடையும் என மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி (Sunil Handunnetti) கூறியுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றத்திற்கும் நாட்டு மக்களுக்கும் அறிவிக்காமல் , அமைச்சரவைக்கு மாத்திரம் அறிவித்து திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதி அபிவிருத்திக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
அதற்கமைய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 24 தாங்கிகளும், இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 14 தாங்கிகளும், இரண்டையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள கூட்டு நிறுவனத்திற்கு 61 தாங்கிகளும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கூட்டு நிறுவனத்தின் 49 சதவீத உரிமம் இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு என்ற அடிப்படையில் மேலும் 30 தாங்கிகள் இந்தியா வசமாகும். அதற்கமைய 44 எண்ணெய் தாங்கிகள் இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் காலங்களில் டொலர் நெருக்கடியின் காரணமாக எஞ்சியுள்ள தாங்கிகளும் இதே போன்று இந்தியாவிற்கு வழங்கப்படும்