மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு நிலைப்பாட்டின் அமைப்பு தொடர்பாக இலங்கை மத்திய வங்கி தெளிவுப்படுத்தி இருக்கிறது.
இதன்படி ஒரு மத்திய வங்கியின் சர்வதேச இருப்பு மேலாண்மை என்பது ஒரு மாறும் மற்றும் தொழில்நுட்ப செயல்முறையாகும்,
2021 டிசம்பர் இறுதியில் இலங்கை மத்திய வங்கியின் சர்வதேச கையிருப்பு நிலையின் அமைப்பில் ஏற்பட்ட மாற்றம் தொடர்பான பல தவறான விளக்கங்கள் முன்வைக்கப்பட்டன.
எனவே உண்மை நிலவரம் தொடர்பாக தகவல்களை வழங்குவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2008 ஆம் ஆண்டின் இறுதியில் மத்திய வங்கியில் 92 மில்லியன் அமெரிக்க டொலர்களாக தங்க இருப்பு இருந்தது.
அது படிப்படியாக 2014 ஆம் ஆண்டின் இறுதியில் 893 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்தது.
எனவே, கையிருப்பில் உள்ள தங்க இருப்புகளின் பங்கு அவ்வப்போது மாறக்கூடும் என்பது தெளிவாகிறது,
அதாவது இருப்பு மேலாண்மை முன்னுரிமைகளுக்கு ஏற்ப, மத்திய வங்கி அதன் தங்க இருப்புகளை வாங்க, வைத்திருக்க அல்லது விற்பனை செய்யவேண்டிய நிலைகளை இங்கு விளக்குகிறது.