More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • உயிரியல் பூங்காவில் உள்ள புலிக்கு கொரோனா தடுப்பூசி!
உயிரியல் பூங்காவில் உள்ள புலிக்கு கொரோனா தடுப்பூசி!
Jan 06
உயிரியல் பூங்காவில் உள்ள புலிக்கு கொரோனா தடுப்பூசி!

சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில் உள்ள பியூன் உயிரியல் பூங்காவில் சார்லி என்ற பெங்கால் புலிக்கும், சண்டாய் என்ற ஒராங்குட்டானுக்கும் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.  மேலும் மூன்று சிங்கங்கள், இரண்டு புலிகள் உள்ளிட்டவைகளுக்கும் வனவிலங்குகளுக்காக உருவாக்கப்பட்ட தனித்துவ தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது. 



முன்னதாக எட்டு விலங்குகள் கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்காக பயன்படுத்தப்பட்டதாக சாண்டியாகோவின் பியூன் மிருகக்காட்சிசாலை

கால்நடை பிரிவு மருத்துவத்துறை தலைவர்  செபாஸ்டியன் செலிஸ் தெரிவித்தார். தடுப்பூசிகள் விலங்குகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறதா, அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்த பரிசோதனை நடைபெற்றதாகவும், கொரோனா வைரஸால் பாதிக்கப்படக்கூடிய விலங்குகளைப் பாதுகாப்பதே இதன் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.



விலங்குகளை தாக்கும் கொரோனா வைரஸ் சிங்கப்பூர், ஜாக்ரெப் மற்றும் வாஷிங்டனில் உள்ள சிங்கங்களிடத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

பெல்ஜியத்தில் உள்ள நீர்யானைகள், இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரான் வகை புலிகள், ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் உள்ள

கொரில்லாக்களிலும் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. எனினும் புயின் உயிரியல் பூங்காவில் எந்த விலங்குகளும் கொரோனா வைரஸ்

பரிசோதனை செய்யப்படவில்லை. அமெரிக்காவில் உள்ள  பல்வேறு உயிரியல் பூங்காக்கள் விலங்குகளுக்கு வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன.



சிலி நாட்டு மக்கள்தொகையில் 90 சதவீதம் பேர் முழுமையான தடுப்பூசியைப் பெற்று விட்ட நிலையில் வன விலங்குகளுக்கும் தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடங்கி உள்ள முதல் லத்தீன் அமெரிக்க நாடாக சிலி திகழ்கிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar29

ஒருவராலும் யாராலும் தடுக்க முடியாத அபாரமான ஆயுத திறன்

Mar26

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜ

Jul07

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் ஊரடங்கு

Aug27

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு

May17

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த வியாழக்கிழம

Aug06

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலிபான் பயங்

Aug15

இங்கிலாந்து நாட்டில் ஜூலை மாதம் 19-ம் தேதி முதல் ஊரடங்க

Feb15

கொரோனா தொற்றின் புதிய மாறுபாடு நாட்டில் பரவுவதை கட்டு

Apr19

பருவநிலை மாற்றத்தை தடுப்பதில் அமெரிக்கா, சீனா இடையே உ

Nov11

அமெரிக்கா 1969-ம் ஆண்டு ஜூலை 21-ந்தேதி முதன்முதலில் மனிதனை

Mar05

வவுனியாவினை சொந்த இடமாகக் கொண்ட 39 வயதுடைய மலர்விழி என்

Feb21

துருக்கி மால் ஒன்றில், செல்போன் பார்த்தப்படியே நடந்த

Mar24

கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய

Feb24

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா க

May16

காசா முனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் வான் தாக்குதல்களி