More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் வீரர் சுட்டுக்கொலை!
இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் வீரர் சுட்டுக்கொலை!
Jan 03
இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் வீரர் சுட்டுக்கொலை!

ஜம்மு- காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படை வீரரை இந்திய ராணுவத்தினர் சுட்டு கொன்றனர்.



இது குறித்து ராணுவ காலாட்படை பிரிவு மேஜர் ஜெனரல் பென்தர்கர் கூறியது:-



காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கிரன் செக்டார் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர், ஊடுருவ முயன்றார். இந்திய பாதுகாப்பு படையினர் அந்த வீரர் மீது நடத்திய தாக்குதலில் அவர் உயிரிழந்தார். அவர் குறித்து ஆராய்ந்தபோது, உயிரிழந்த வீரர் முகமது ஷபீர் மாலிக் என தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து ஏகே ரக துப்பாக்கி, வெடிமருந்து, கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 



கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியுள்ளது.  ஹாட்லைன் மூலம் பாகிஸ்தான் ராணுவத்தினரை தொடர்பு கொண்டு உடலை பெற்றுக்கொள்ளும்படி கூறியுள்ளோம். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr01

உலக நாடுகளுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று

Apr03

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே இர்பின், புச்சா ஆகிய பகுதிக

Aug18

தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதிலிருந்து அந்

Jun10

கஞ்சாவிற்கு சட்ட அனுமதி வழங்கிய முதல் ஆசிய நாடு

Jun16

நேட்டோ என்று அழைக்கப்படும் ‘வடக்கு அட்லாண்டிக் ஒப்ப

Jul13

இங்கிலாந்து இந்தியாவின் நெருங்கிய வர்த்தக கூட்டாளிய

Aug30