More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ராஜஸ்தானில் திருமணம், அரசியல் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு!
ராஜஸ்தானில் திருமணம், அரசியல் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு!
Jan 03
ராஜஸ்தானில் திருமணம், அரசியல் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு!

ராஜஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்தம் எண்ணிக்கை 9,56,883 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தற்போது 1,572 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  ஜனவரி 7 ஆம் தேதி காலை 5 மணி முதல் இந்த கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும். அதன்படி அரசியல் பேரணிகள், போராட்டங்கள், கண்காட்சிகள் மற்றும் திருமணங்களில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையை 100 ஆகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் நகரில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளைவரை உள்ள பள்ளிகளை ஜனவரி 3 முதல் 9 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இறந்தவர் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை 20 ஆகக் குறைக்கப்படுகிறது. மாநிலத்தில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar12

உக்ரைனில் இருந்து தனது வளர்ப்பு நாய்களுடன் தமிழகத்தி

Jan02

ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் சீறி பாய திருச்ச

Mar18

பிரச்சாரத்தில் பழக்க தோஷத்தில் தங்க தமிழ்ச்செல்வம் இ

Jun21

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு,

Jun24