More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மீரட் விளையாட்டு பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!
மீரட் விளையாட்டு பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!
Jan 02
மீரட் விளையாட்டு பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

உத்தர பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைப்பதற்கான வேலைகளில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது.



இதனால் அம்மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசும், யோகி ஆதித்யநாத் அரசும் செயல்படுத்தி வருகின்றன.



இந்நிலையில், உத்தர பிரதேசம் மாநிலத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள மீரட் நகரில் அமைக்கப்பட்டுள்ள மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு இன்று அடிக்கல் நாட்டினார்.



சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டு பல்கலைக்கழகம் நிறுவப்படுகிறது. செயற்கை ஹாக்கி மைதானம், கால்பந்து மைதானம், கூடைப்பந்து, கைப்பந்து,  கபடி மைதானம், டென்னிஸ் மைதானம், உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம் உள்ளிட்டவை இங்கு அமைகின்றன.



துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக்ஸ், பளுதூக்குதல், வில்வித்தை உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு பயிற்சி பெறும் வசதிகளும் இங்கு இருக்கும் என பிரதமர் அலுவகம் தெரிவித்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar09

 கடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 51-வது வார்டில்

May29

வடபகுதி கடற்றொழிலாளர் சம்மேளனங்களின் கோரிக்கையை அடு

Feb22

எந்த வயதிலும் சாதிக்க முடியும் என்பது தான் பழமொழிக்கு

Aug08

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு த

Feb11

அடுத்த சில மணிநேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யக்

Mar20

நேற்று ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவருமான சண்

Aug22

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான இமாசல பிரதேசத்தின் கின

Mar15

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில்,

Mar06

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்குப் படகில் கடத்த மு

Feb20

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலை

Sep16

அண்ணாவின் 113-வது பிறந்த நாளை முன்னிட்டு, அண்ணாசாலையில்

Jul21

நாடு முழுவதும் ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாட

Jun10

ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதியில் உள்ள இரண்டாம் த

Apr30

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவ வேண்டும் எனவும் த

Feb04

பீகாரில் திருமணம் ஆகாத பெண்களுக்கான கல்வி உதவித் தொகை