தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த 15-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று நிறைவடைகிறது.
இதற்கிடையே, ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிப்பது குறித்தும், புதிய கட்டுப்பாடுகளை விதிக்கலாமா என்பது குறித்தும் சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை வெளியிடுகிறார்.