More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் தகவல்!
2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் தகவல்!
Dec 30
2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-தமிழக கடற்கரையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.



நாளை கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்களில் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.



வருகிற 1-ந் தேதி கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.



மற்ற கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.



2-ந்தேதி கடலோர மாவட்டங்களிலும், 3-ந்தேதி தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.



சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.



இன்று முதல் 3-ந் தேதி வரை குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan26

இந்தியாவில் கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் அரு

Mar31

கர்நாடகாவில் 25 வயது பெண்ணை திருமணம் செய்து இணையத்தில்

Oct06

பஞ்சாயத்து ராஜ் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டதை அட

Sep08

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட ச

Mar06

தி.மு.க. -காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவ

Jun15