டெல்லியில் கொரோனா எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், சமீப நாட்களாக பாதிப்பு அதிகரித்து வருகிறது.
டெல்லியில் புதிதாக 290 பேருக்கு நேற்று பாதிப்பு உறுதியானது. கடந்த ஜூன் 10ந்தேதியில் இருந்து ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை அதிகம் ஆகும்.
இதற்கிடையே, கடந்த 2 நாட்களில் தினமும் 200 பேருக்கும் கூடுதலாக பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் டெல்லி அரசு இரவுநேர ஊரடங்கை விதிக்கும் முடிவை அறிவித்தது.
இந்நிலையில், இந்த உத்தரவு நேற்றிரவு முதல் அமலுக்கு வந்தது. இதன்படி, இரவு 11 மணி முதல் காலை 5 மணிவரை இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கும்.
இரவில் செல்லும் வாகனங்களை பணியில் உள்ள போலீசார் நிறுத்தி, சோதனை செய்து பின்னரே அவற்றை செல்ல அனுமதிக்கின்றனர். இந்த ஊரடங்கால் பல சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.