மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இந்து மத தலைவர் காளிச்சரண், சத்தீஸ்கர் மாநிலம் ராயப்பூரில் நடைபெற்ற ஆன்மீக மாநாட்டில் பங்கேற்று பேசியபோது, மகாத்மா காந்தி குறித்து தவறான வார்த்தையை பயன்படுத்தினார். மேலும் மகாத்மாவை சுட்டுக் கொன்ற கோட்சேவை பாராட்டி பேசினார். அவரது பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியினர் அளித்த புகாரை அடுத்து காளிச்சரண் மீது ராய்ப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம், மகார்ஷ்டிர சட்டசபையில் இன்று எதிரொலித்தது. சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் நவாப் மாலிக் இப்பிரச்சனையை சட்டசபையில் எழுப்பினார். மகாத்மா காந்தியை தவறாக பேசிய இந்து மத தலைவர் காளிசரண் மீது
அவரது கருத்தை காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரித்தனர். அவர்களும், இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசுக்கு சபாநாயகர் உத்தரவிடும்படி வலியுறுத்தினர்.
பின்னர் இதுபற்றி பேசிய துணை முதல்வர் அஜித் பவார், ‘இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமையாகும் இந்து மத தலைவர் காளிசரண் வெளியிட்ட கருத்து குறித்து அறிக்கை கேட்டு, அதன் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.