More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • 4 கட்சிகளுக்கு மட்டும் அழைப்பு என்பது எதிர்க்கட்சிகளை பிளவுப்படுத்தும் சதி: மல்லிகார்ஜுன கார்கே!
4 கட்சிகளுக்கு மட்டும் அழைப்பு என்பது எதிர்க்கட்சிகளை பிளவுப்படுத்தும் சதி: மல்லிகார்ஜுன கார்கே!
Dec 20
4 கட்சிகளுக்கு மட்டும் அழைப்பு என்பது எதிர்க்கட்சிகளை பிளவுப்படுத்தும் சதி: மல்லிகார்ஜுன கார்கே!

பாராளுமன்றத்தின் கடந்த கூட்டத்தில் ஒழுங்கீனமான நடந்து கொண்டதாக 12 மாநிலங்களவை எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டது. ஆனால், கூட்டம் முடியும் வரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.



கடந்த 29-ந்தேதி பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது, 12 எம்.பி.க்களும் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க முடியாத வகையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆறு காங்கிரஸ் எம்.பி.க்கள், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சிவ சேனா கட்கியை சேர்ந்த தலா இரண்டு எம்.பி.க்கள்., இரண்டு இடது சாரி கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.



இதனால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து, 12 எம்.பி.க்கள் மீதான நடவடிக்கையை துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவரான வெங்கையா நாயுடு திரும்பப்பெற வேண்டும் என  வலியுறுத்தி வருகின்றன. போராட்டங்களும் நடத்தி வருகின்றன. ஆனால், சஸ்பெண்ட் நடவடிக்கை திரும்பப் பெறப்படவில்லை.



இதனால் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 10 மணி நேரம்தான் அவைதான் நடந்துள்ளது. இதனால் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் குறித்து பேச்சுவார்த்தை நடத்த நான்கு கட்சிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.



இந்த நிலையில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு 4 கட்சிகளுக்கு மட்டும் அழைப்பு விடுத்திருப்பது எதிர்க்கட்சிகளை பிளவுப்படுத்தும் சதி. சஸ்பெண்ட் விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக உள்ளன. நான்கு கட்சிகள் என்பது நியாயமற்றது மற்றும் துரதிருஷ்டவசமானது என காங்கிரஸ் எம்.பி. மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul06

இந்தியாவில் பலரும் யூடியூப் சேனலில் தனியாகக் கணக்கு த

Sep04

முதல்-அமைச்சர் 

பீகார் அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொத்து விவரங்களை

Jul17

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கஞ்ச்ப

Apr14

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக

Jan20

மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியா

Feb26

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது விவகாரத்தி

Jul07

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்த

Sep27

மத்திய அரசின் மிக முக்கியமான சுகாதார திட்டமான, ஆயுஷ்ம

Mar27

துபாய் எக்ஸ்போவில் பங்கேற்க அரசு முறை பயணமாக சென்னையி

Jul04

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப

Jan04

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா அதிவேகமாக

Feb09

மலையில் சிக்கிய இளைஞரை இரண்டு நாட்களுக்கு பின் பாத்தி

Jan22

புதிய வேளாண் சட்டங்களை அமுல்படுத்துவதை ஓராண்டு முதல்

Mar16

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை அடுத்துள்ள சிஜர்சி என்ற