கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 7,081 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,469 பேர் குணமடைந்துள்ள நிலையில், 264 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் தற்போது 83,913 பேர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது கடந்த 2020 மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரையிலான தினசரி அப்டேட்டின் குறைந்த பதிவாகும்.
இந்தியாவில் இதுவரை 3,41,78,940 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 4,77,422 பேர் உயிரிழந்துள்ளனர். 1,37,46,13,252 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24-ந்தேதி நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.