More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் இலங்கைக்குத் தென்கிழக்காக நிலை!
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் இலங்கைக்குத் தென்கிழக்காக நிலை!
Dec 17
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் இலங்கைக்குத் தென்கிழக்காக நிலை!

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் இலங்கைக்குத் தென்கிழக்காக நிலை கொண்டுள்ளது. அது அடுத்த 48 மணித்தியாலங்களில் அருகிலுள்ள கடற்பரப்புகளை விட்டு விலகி கிழக்குத் திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.



வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



இதேவேளை நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.



வடக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் திருகோணமலை, புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.



மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.



மழை நிலைமை : புத்தளத்திலிருந்து காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாகஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான ஆழம் கூடிய கடற்பரப்புகளில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 45 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-55 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.கடல் நிலை : ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

பிரதானநகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

அனுராதபுரம் - அவ்வப்போது மழை பெய்யும்

மட்டக்களப்பு - அவ்வப்போது மழை பெய்யும்கொழும்பு - பி.ப. 4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

காலி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

யாழ்ப்பாணம் - அவ்வப்போது மழை பெய்யும்

கண்டி - அவ்வப்போது மழை பெய்யும்

நுவரெலியா - அவ்வப்போது மழை பெய்யும்

இரத்தினபுரி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

திருகோணமலை - அவ்வப்போது மழை பெய்யும்



மன்னார் - அவ்வப்போது மழை பெய்யும்

 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep22

திருகோணமலை துறைமுகம் 30 வருடங்களுக்கு பின்னர் தனது முத

Jul19

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் காவல்துறையினரால் முன்ன

Mar09

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாட்டுக்க

Sep22

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்கா தொடர்ந

May03

நடைபெறவுள்ள ஹர்த்தாலின் பின்னர் அரசாங்கம் வீட்டுக்க

Sep22

உடன் அமுலுக்கு வரும் வகையில் இனிப்பு வகைகளின் விலையை 10

Feb04

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபத

Jan18

சந்தைகளில் தற்போது சகல ரக அரிசிகளின் விலைகளும் அதிகரி

Feb05

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிர

Mar03

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு இன்று கிராமப்புற மற

Aug25

வவுனியாவில் 152 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன

May03

காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டக் களத்தில்

Oct13

ஆபாச காணொளியை காட்டி , 7 வயதான தனது மகளை வன்புணர்ந்தார்

Feb04

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் சீனப் பிரதமர் லீ கெகுவாங் ஆகி

Sep08

கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால