More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்கள்!
மன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்கள்!
Dec 14
மன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்கள்!

மன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) மதியம் காணாமல் போன நிலையில் நேற்று காலை ஒரு மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்றைய நபர் இன்று (14) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



நேற்றைய தினம் (13) காலை யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த தர்ஷன் (வயது-19) என்பவர் சடலமாக மீட்கப்பட்டார்.



இன்று செவ்வாய்க்கிழமை (14) காலை மன்னார் உப்பளம் கடற்கரை பகுதியில் குறித்த மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



குறித்த சடலம் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) மதியம் மூன்று மீனவர்கள் கோந்தை பிட்டி கடலில் தமது படகை செலுத்தி தொழிலுக்குச் செல்ல சரி பார்த்துள்ளனர்.

இதன் போது படகில் வெளி இணைப்பு இயந்திரத்தை இணைந்து படகை செலுத்தி பார்த்துள்ளனர். இதன் போது குறித்த படகில் மீனவர்கள் உட்பட 8 பேர் இருந்துள்ளனர்.



இதன் போது படகின் வெளி இணைப்பு இயந்திரம் திடீரென இயங்காத நிலையில் காணப்பட்டுள்ளது.



காற்றின் காரணமாக படகு கடலில் சென்று கொண்டிருந்தது. இதன் போது படகின் முன் அணியத்தில் நின்ற ஒருவர் திடீரென கடலில் வீழ்ந்து கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மற்றைய மீனவர் அவரை காப்பாற்ற கடலில் குதித்துள்ளார்.



எனினும் குறித்த மீனவரும் கடல் நீரில் இழுத்துச் செல்லப்பட்டார்.



எனினும் ஏனையவர்கள் போராடியும் குறித்த இருவரையும் மீட்க முடியவில்லை. நீண்ட நேரத்தின் பின்னர் குறித்த படகின் வெளி இணைப்பு இயந்திரம் இயங்கிய நிலையில் இவர்கள் கரை திரும்பி ஏனைய மீனவர்களின் உதவியுடன் தேடியுள்ளனர்.



இதன் போது கோந்தை பிட்டி கடலில் இருந்து சற்று தொலைவில் தர்ஷன் (வயது-19) என்பவர் மீட்கப்பட்ட நிலையில் அவரது சடலம் மீனவர்களால் மீட்கப்பட்டு கோந்தைப்பிட்டி கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டது.



மற்றைய மீனவரை மீனவர்கள் தேடிய நிலையில் இன்று (14) காலை மன்னார் உப்பளம் கடற்கரை பகுதியில் வைத்து சடலமாக மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb17

கம்பளை பொது சுகாதார பரிசோதகர்களினால் மூன்று தடவைகளை PCR

Mar17

கஜீமா தீ விபத்தில் தீக்கிரையாக்கப்பட்ட எளியவர்களின்

Apr13

எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலையீடின்றி கடந்த 9ஆம் தி

May13

நாட்டில் நாளைய தினம் இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்க

Jan22

சிறுநீரகத்தில் கல் சேர்ந்திருப்பதை முன்கூட்டியே கண்

Oct02

அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜுலி சங், பிரித்தான

Mar07

பண்டாரவளை - எலபெத்த கும்புர தகுன கெபிலேவெல பகுதியில் ப

Apr02

வெலிகம பல்பொருள் அங்காடியில் வரிசையை தவிர்த்த ரஷ்ய பி

Oct25

அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானியை ஜனாதிபதி கோட்

May23

மியன்மார் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்ற ஆங் சான்

Oct23

22 ஆவது திருத்தும் அமுலாகியுள்ள நிலையில் தற்போது இயங்க

Mar04

இலங்கையில் செயற்படும் இந்திய எரிபொருள் நிறுவனமான “இ

Sep26

சிறுநீரக நோயாளர்களை பரிசோதிப்பதற்காக நவீன தொழில்நுட

Feb02

வைத்தியர் கயான் தந்த நாராயணனின் மரணத்தின் மூலம் கொரோன

Sep22

பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் திருத்தச் ச