விஷால் நடிப்பில் உருவாகி வரும் லத்தி படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
து.பா.சரவணனின் 'வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு விஷால், தனது 32வது படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் வினோத்தின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை விஷாலின் நண்பர்களான ரமணா மற்றும் நந்தா ஆகியோரது ராணா பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் தயாராகிறது.
இதையடுத்த விஷாலுக்கு ஜோடியாக 8 ஆண்டுகளுக்கு பிறகு சுனைனா நடிக்கிறார். சி.எஸ்.சாம் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். முழுக்க ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்திற்கு ஏ.வினோத்குமார் கதை, திரைக்கதை எழுதியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இதற்கு அமைய தற்போது படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. படப்பிடிப்பின் கடைசி நாளில் 24 மணி நேரம் முழுக்க படப்பிடிப்பு நடாத்தியுள்ளாராம். படத்தின் 3-வது கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் ஹைதராபாத் செல்கின்றனர். அங்கு 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளாராம். படம் முழுக்க அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இடம் பெறுகிறது. பீட்டர் ஹெய்ன் இந்தப் படத்திற்கு ஸ்டண்ட் கோரியோகிராப் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.